இறக்கமாட்டேன்

உன் எண்ணத்தை
எடுத்தெறிய நினைக்கிறேன் .., முடியவில்லை !

உன் எண்ணம் திடப்பொருளாக இருந்தால் ...,
கரம் கொண்டு பிய்த்து எறிந்துவிடுவேன் .

உன் எண்ணம் எழுத்தாக இருந்தால் ,
எதையாவது ஊற்றி அழித்துவிடுவேன் !

எனக்காக அரும்பாத இதயத்தின் எண்ணம்
எனக்கெதற்கு ?

பார்த்து பார்த்து ரசித்த
உன் பார்வை படுத்தும் பாடு
மிகக்கொடித்து !

விழுப்புண் ஆணுக்கு அழகு !
விழிப்புண் உண்மையில் கொடிது .

நான் ...,
பறக்கநினைக்கும் போதெல்லாம்
பணிவிழுந்து பதத்துப்போகும் சருகாகிப்போகிறேன்
உன் நினைவால் !

நான் உரக்க காத்துக்கிறேன்
ஊருக்கே கேட்கிறது
உனக்குமட்டும் கேட்கவில்லை .

என்றோ சொன்னேன்
என் உயிரின் பாதி நீயென்று ,
இன்று உணருகிறேன்
என் உயிரின் மறு பாதியும் -
நீயே ஆக்கிரமித்து இருக்கிறாய் என்று .

நான் நிச்சயமாக
இறக்கமாட்டேன் !
நான் இறந்து செல்லும்
அடுத்த உலகில் நீ இருக்கமாட்டாய் என்பதற்காக !.
- கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (1-Mar-24, 11:07 pm)
சேர்த்தது : கங்கைமணி
பார்வை : 54

மேலே