காதல் யெனப்படுவது யாதெனின்

காதல் யெனப்படுவது யாதெனின்
யாதொன்றும் தீதில்லா மனமாகும்

கரம்பற்றியவளின் கையை கைவிட்டாலும் விடேன் ( இறை வணங்க)

மனதினில் மறந்தும் விடேன்
அவள் நினைவை துறவேன் யென்பதே

மோதல் சாதல் வாழ்தல் யெல்லாம்
காதல் இல்லை...

கருத்தொற்றுமை கண்டு
கண்ணின் மணியாய்

கருத்தின் ஒளியாய்
கவியின் வடிவாய்

கருவின் உருவாயாக
தருவின் வருவாயாக

புவியின் பொருளாய்
உணர்வின் உன்னதமாய்

உழைப்பின் அழைப்பாய்
உறுதியின் செருதியாய்


அகங்காரம் நீக்கி
ஓங்காரங்கொண்டு

ஓர்உயிராய் ஓம்பி உயிர்
வாழ்தலே ஒழுக்கம் ஆகும்

காதல் யெனப்படுவதற்கே.

எழுதியவர் : பாளை பாண்டி (1-Mar-24, 11:22 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 140

மேலே