கண்ணாடி முன் நிற்கிறேன்

கண்ணாடி முன் நிற்கிறேன்

கண்ணாடி முன்
நிற்கிறேன்
என்னை நானே
இரசித்து பார்க்க
வயதின் தோற்றம்
மறைந்து விட்டது
கரு கரு மீசை
சொட்டைக்கு முடி
இருப்பது போல்
வாரி விட்டது
இறுக பற்றிய
சட்டை
அதை உள்ளே
சொருகிய காற்சட்டை
பாதம் அலங்கரித்த
பாட்டா ஷூ
பிரமாதமாய் இருக்கிறேன்
மனதுக்குள் நான் நினைக்க

கண்ணாடிக்கென்னவோ நினைவுக்கு
வந்தது
இதை உருவாக்கியவன்,
வியாபாரியிடம் சொல்லி கொண்டிருந்தது

இந்த கண்ணாடி முன்னாடி
கழுதைய கொண்டு
போய் நிறுத்தினாலும்
சும்மா அரேபிய குதிரையாட்டம்
காட்டும்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Apr-25, 9:47 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 3

மேலே