விவசாயி நம் நண்பன்
இயற்கை சீற்றம் விளைச்சல்
பாழா போனாலும்
பூச்சி தின்றும் விளைச்சல்
நாசமா போனாலும்
பாடுபட்டு உழைச்ச மக்கள்
பாழா போனாலும்
உழைச்சோம் உழைச்சோமின்னு
கூவி சொன்னாலும்
களவாணி ஊர்ல கடனடைக்காம
சுத்தி வந்தாலும்
சோம்பேறி வெள்ள எறும்பு
கூத்து போட்டலும்
வக்கணையா பூஜை பண்ணி
விருந்து வெச்சாலும்
வங்கி கடன் தள்ளுபடி
வேணுமா என்றபடி
சோறு பொங்க வெச்சவன
கயற்றில தொங்கவெச்சான்
விதையை போட்ட குடும்பத்துக்கு
கண்ணீர் அருவடயா
கடன்காரன் பாவி மகன்
விவசாயம் பண்ணினதால
வியாபாரம் செய்ய படிக்கலையே
விவசாயம் துறையில
லாப நஷ்டம் பார்க்காமலே
விதையை விதைச்சான்
பசியாற விதை விதைச்சான்
விதைய தின்னாம
நீதி தேவதை பசியில்லதவளா
அநீதியின் முன்
கொள்ளைக்காரன் அல்ல உழைப்பாளி
விவசாயி நண்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
