கவியின் உரிமையாளன்

ஏதாவது ஒன்றை
எழுதி விட வேண்டுமென்று
துடிக்கும் என் பேனா....
அதன் துடிப்பே
இந்த தொடக்கம்...

கண்டதையும்
எழுத முடியாமல்
கண்டபடி கசக்குகிறேன்
மூளையை...

அங்கும் இங்கும்
தலை திருப்பி
தவியாய் தவிக்கிறேன்...

இரவும் பகலும்
உணரக்கண்டேன்
சிந்தனையில்
மாறுபடும் செயல்திறனை..

ஒரு படைப்பு சிறக்க
பார்வைகள் வேண்டும்
பார்வைக்கும் மேலாக
கருத்துரை வேண்டும்
அதன் பின்பு
அங்கீகாரம்
கவிஞன் என்றொரு அந்தஸ்து
இவைகளை தாண்டமுடியாமல்
தவிக்குது
படகு போல் என் படைப்பு...

விரிந்த வானில்
பறக்கும் பறவைகள்
அது போல்
என் படைப்புகளும்
சிறகு விரிக்க
ஆசைகொள்கின்றேன்...

இடைவிடாத உழைப்பு
இடையிடையே கொஞ்சம் களைப்பு
களைப்பு தெரியாமல் இருக்க
நான் கொண்ட கிறுக்கள்
கிறுக்கள்களால் நிறைந்த தெருக்கள்
அதை பத்திரப்படுத்தாமல்
அப்புறப்படுத்தும் சமூகம்..

இரும்பையும் இளக்கி
இலக்கணமாக்கும் கவிஞன்
எழுத்துக்களில் பிழைகளாய்
தெரிவதுண்டு.
சுட்டிக் காட்டுகையில்
சுகமாய் நெளிவதுண்டு..

சற்று நேரம்
நான் ஒரு தனிமை விரும்பி
கவிதை தளும்பிடும் போது
வருவேன் நெருங்கி.

என்னையும் கவிஞனாய்
ஏற்க மறுக்கட்டும்.
காகிதம் எனை கணவனாய்
ஏற்றுக்கொள்ளும்.
என் கவிகளை அது தான்
வலி பொருத்து ஈன்று தருகின்றது...

எழுதியவர் : அன்வர்தீன்.. (6-Feb-15, 3:48 am)
Tanglish : kaviyin URIMAIYALAN
பார்வை : 89

மேலே