காவடி ஆடுகள்

மேய்ச்சல் நிலங்கள்
ஆக்கிரமிக்கப் பட
எல்லை வகுத்த
தரிசுச் சிறைக்குள்
தன்னகப் படுத்தப் பட்ட
மேய்ப்பனின்
அடக்குமுறைச்
சிறைக் கைதிகள்.
கண்டாயங்களுக்குள்
காணாமல் போகாதிருக்க
கண்ணீருடன்
காவடி சுமக்கும்
பலிபீடத்து ஆடுகள்.

எழுதியவர் : சிவநாதன் (6-Feb-15, 12:33 am)
Tanglish : kaavadi aadugal
பார்வை : 53

மேலே