நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம்

மெல்லத் தகர்க்க நமை பிரிவினைகள்
தள்ளப் பாக்குது பள்ளத்தில் - இவை
தெள்ளத் தெளிவி னுடனே வேரில்
கிள்ளி எறிந்தே களைவோம்

உள்ளத் துறதி கொள்வோம் இளைஞர்
உந்தக் கிளம்பி எழுவோம் - இனி
எமக்கு எங்கும் இணையில்லை என
ஏற்றம் பெறவே உழைப்போம்

நாட்டின் வளம் பெறுக்குவோம் சாதி
நாற்றம் களைவோம் மேதியில் சூழ்
நல்லன வெல்லம் நம் வீதியில்
சில்லென உலாவரச் செய்வோம்

கனிவளம் நதிவளம் தாதுவளம் பல
இனி நம்வளம் செழிக்கவோ - கொள்ளை
தனி மனிதர் கொழிக்கவா தடுத்து
இனி தன்நிலை உயர்த்துவோம்

மழலையற்கு இனிதாய் ஊட்டுவோம் கலை
பலவும் ஊடே ஒற்றுமையும் தேசப்
பற்றினையும் - எவற்கும் கீழ் நாமில்லை
வெற்றியை இதில் எத்திடுவோம்

--------- முரளி


எழுதியவர் : முரளி (8-Feb-15, 6:45 pm)
பார்வை : 104

மேலே