ஆதலால் காதல் செய்வீர் -மண் பயனுற வேண்டும் போட்டிக் கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
மாண்டு மடியும் மானிட வாழ்வு
மண்ணில் சிறந்து விளங்கிடவே
உறவுகள் போல விலங்குகளையும்
உள்அன்போடு காதல் செய்வீர் ..!!
வற்றிப் போகும் நதி அனைத்தும்
சங்கீதம் பாடி தவழ்ந்து செல்ல
நீரை காத்திடும் வனத்தினையும்
அழித்திடாமல் காதல் செய்வீர்.!!
கண்ணை காக்கும் இமைபோல
எம்மை காக்கும் பெற்றோரை
முதியோர் இல்லத்தில் புகுத்தாமல்
கடைசி வரைக்கும் காதல்
செய்வீர்...!!
சுழல்கின்ற உலகம் நின்றிடலாம்
சுடர்விடும் சூரியன் இருள்தரலாம்
மரணமும் இன்றே நிகழ்ந்திடலாம்
ஆதலால்
அன்போடு அனைத்தையும் காதல் செய்வீர்..