நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுறவேண்டும் கவிதை போட்டி

அலை அலையாய் கடலிருக்கு...
மணல் மணலாய் கரையிருக்கு...
மூணு நாளுக்கு முன்னால
மோட்டார் போட்டுல போன திசை பார்த்து
கை குழந்தையோட கணவன் போன திசை காட்டி
உன் அப்பா வருவாரு விளையாட எல்லாம் கொண்டு வருவாருன்னு
பெத்த புள்ளயோட அழுகைக்கு தட்டிக் கொடுத்தாள்
அவ மனசுக்குள்ள அழுதுகிட்டே பட்டினி கிடந்தாள்

குடிசையில பழைய சோறும் புளிச்சி போச்சு
பெத்த புள்ள வயத்து பசியில துடிச்சி போச்சு
இரவெல்லாம் உறக்கம் விட்டு வாசல் பாத்துக்கிடந்தாள்
அக்கரையில சூரியன் பிறக்கையில் ஓடி நின்றாள்...

கூட போன கடலோடிகளெல்லாம் கரை வந்து சேந்தாச்சு
இவ வாழ்க்கை மட்டும் நடுக்கடலுக்கே போச்சு
எல்லைய தாண்டுன குத்தத்துக்கு
சுட்டு போட்டார்கள் ஆழ்கடல் அரக்கர்கள்

கடலோடிகள் வாங்கி வந்த வரமோ இது
இல்லை இல்லை...
கடல் கொள்ளையர்கள் செய்து வரும் சதியடி பெண்ணே!

எழுதியவர் : லெனின் மாறன் (8-Feb-15, 6:58 pm)
பார்வை : 85

மேலே