எதனாலோ

ஆடும் ஈசன் அருளினாலோ
.....அயன்றன் மனைவி அருளினாலோ
தேடும் அறிவின் பயனினாலோ
.....தேர்ந்த ஞானத் தெளிவினாலோ
கூடும் கவிதைத் திறத்தினாலே
.....கூட்டும் ஓசைச் சுவையினாலே
நாடும் மனத்தைப் பறவையாக்கி
.....ஞான வானைத் திறக்குமாறே!

[அறுசீர் விருத்தம்]

விளாங்காய்ச் சீர்கள் வரத் தொடுக்கப்பட்டது, சந்தவசந்தக் குழுமத்திற்காக! புலவர்களின் கவித்திறத்தை வியந்தது...

எழுதியவர் : விஜயநரசிம்மன் (8-Feb-15, 7:16 pm)
பார்வை : 180

மேலே