தேசம் போற்றுவோம் வளர்ப்போம் – மண் பயனுறவேண்டும் கவிதைப்போட்டி

பாரதமெங்கும் பாவலர் ஒன்றாய்கூடி
கவிதேசம் வளர்ப்போம்- அதை
பாமரனின் வாழ்க்கைப்பாதை சிறக்க
பாணி பாடி வளர்ப்போம்

ஏழு கண்டங்களையும் ஒன்னைக்கும் அன்புதேசம் வளர்ப்போம் - அதில்
பிரிவினை தூண்டும் எச்சக்தியிருப்பினும் அதை தூக்கி மிதிப்போம்

எவ்வுயிரையும் மென்றுமுழுங்கிடா
விஞ்ஞான தேசம் வளர்ப்போம் -அவ் விஞ்ஞானத்தின் நல்வினைகளை விண்மேல் சென்று விதைப்போம்

பாரம்பரியத்தை பண்புடன் மாற்றி
பண்டைய ஒழுக்கத்தை அப்படியே சேர்த்து
தகுதியான தலைவனுடன் ஒரு
தரமான தேசம் போற்றி வளர்ப்போம்.

எழுதியவர் : மகேந்திரன் (8-Feb-15, 8:50 pm)
பார்வை : 82

மேலே