விசயநரசிம்மன் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  விசயநரசிம்மன்
இடம்:  சென்னை, தமிழ்நாடு
பிறந்த தேதி :  10-May-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Dec-2014
பார்த்தவர்கள்:  1117
புள்ளி:  127

என்னைப் பற்றி...

நான் அடிப்படையில் ஒரு கவிஞன், அதனால் ஒரு இயற்பியலாளன். தமிழையும் இயற்பியலையும் நேசிப்பவன், என் நேசங்கள் இரண்டையும் ஒரே புள்ளியில் அணுக விழைபவன்... பொறியியல் கல்லூரியில் துணைப்பேராசிரியன்!

என் படைப்புகள்
விசயநரசிம்மன் செய்திகள்

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...

கரும்புகள் அடுக்கி வைத்து - மண் கலத்திலே மஞ்சள் கட்டி
விரும்பிய புதுநல் அரிசி - உடன் வெல்லமும் அளவில் இட்டு
மங்கல அடுப்பில் வைக்க - அது மணத்தொடு பொங்கும் நேரம்
பொங்கலோ பொங்கல் என்று - நாம் போற்றியே வாழ்த்து வோமே!

அந்தப் பொங்கல் போல்-

வீடெல்லாம் மகிழ்வு பொங்க வீதியெலாம் கோலம் பொங்க
நாடியநல் வளங்கள் பொங்க நட்பொடுவுள் அன்பும் பொங்க
தேடியசெல் வங்கள் பொங்க தெய்வத்தின் அருளும் பொங்க
கூடியவித் திருநாள் அதனில் கூறினோம்யாம் கோடி வாழ்த்தே!

மேலும்

விசயநரசிம்மன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2016 10:55 am

கரும்புகள் அடுக்கி வைத்து - மண்
..........கலத்திலே மஞ்சள் கட்டி
விரும்பிய புதுநல் அரிசி - உடன்
..........வெல்லமும் அளவில் இட்டு
மங்கல அடுப்பில் வைக்க - அது
..........மணத்தொடு பொங்கும் நேரம்
பொங்கலோ பொங்கல் என்று - நாம்
..........போற்றியே வாழ்த்து வோமே!

அந்தப் பொங்கல் போல்-

வீடெல்லாம் மகிழ்வு பொங்க
..........வீதியெலாம் கோலம் பொங்க
நாடியநல் வளங்கள் பொங்க
..........நட்பொடுவுள் அன்பும் பொங்க
தேடியசெல் வங்கள் பொங்க
..........தெய்வத்தின் அருளும் பொங்க
கூடியவித் திருநாள் அதனில்
..........கூறினோம்யாம் கோடி வாழ்த்தே!

[விருத்தங்கள்]

அன்புடன்,
விசயநரசிம்மன்

மேலும்

திருநாளில் கடந்து சென்ற நினைவுகள் சொல்லும் கவிதை 17-Jan-2016 9:13 pm
விசயநரசிம்மன் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
17-Jan-2016 10:45 am

பொங்கலுக்குப் போட்ட பொங்கல் கோலம்.. கோலத்தின் மையமாய் அமைந்திருப்பது ’பொங்கல்’ என்ற சொல், இது மிகப் பழைய தமிழெழுத்தான ‘தமிழி’ (தமிழ்-பிராமி என்றும் அறியப்படும்) எழுத்துருவில் நான்கு திசைகளிலும் எழுதப்பட்டுள்ளது... முதல் முயற்சி ஆதலால் சற்று நேர்த்தி குறைவாகவே அமைந்துள்ளது... நன்றி!

மேலும்

விசயநரசிம்மன் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
17-Jan-2016 10:43 am

மாட்டுப்பொங்கல் அன்று என் அக்கா வீட்டில் போட்ட சிறப்புக் கோலம்.

மேலும்

விசயநரசிம்மன் அளித்த படைப்பில் (public) Dr.V.K.Kanniappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Feb-2015 8:46 pm

சொற்கள் தமையடுக்கிச் சொன்ன தளைகட்டி
நிற்பர் கவிதை நிரப்புவர் - சிற்பி

சிலைதன்னை ஊன்றிச் செதுக்குதல் போலே
பலகாலம் நோற்றேபா யாப்பர் - உலகத்தார்

நன்றென்னும் அந்த நறுஞ்சொல்லைக் கேட்கவே
என்றென்றும் நெஞ்சத்தில் ஏங்குவர் - ஒன்றே

தொழிலென்று கொண்டே தொழில்படுவர் பாட்டில்
எழில்கொண்டு வந்திடவே எண்ணிப் - பொழில்தேடிச்

சோலை வனந்தேடிச் சொல்லா இடந்தேடிக்
காலை இரவென்று பாராமல் - மூளையும்

தொந்திரவில் லாமல் தொழில்பட வேண்டியே
தந்திரங்கள் செய்யத் தலைப்படுவர் - மந்திரம்போல்

இத்தனை செய்தும் இரங்காத இன்கவி
சித்தெனத் தோன்றும் சிறுநொடியில் - அத்தனையும்

சாலமோ மாயமோவெண் தாமரை யாள்தந்த
சீலமோவென

மேலும்

அருமையான வெண்பா, விவேக். 24-Dec-2015 9:41 pm
ஐயா, தங்களைப் போன்ற சான்றோரின் பாராட்டு பெறுவது என் பாக்கியம்... மிக்க நன்றி... தங்கள் குறிப்பையும் பதிவில் இணைக்கின்றேன்... நன்றி!! 24-Dec-2015 8:09 pm
தோழ, மிக்க மகிழ்ச்சி... நன்றி :-) (தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும், வேலை முசு, இந்தப் பக்கம் அதிகம் வர இயலவில்லை!) 24-Dec-2015 8:08 pm
நண்பா, கருத்துக்கு நன்றி! (தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும், வேலை முசு, இந்தப் பக்கம் அதிகம் வர இயலவில்லை!) 24-Dec-2015 8:07 pm
விசயநரசிம்மன் - விசயநரசிம்மன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2015 10:42 pm

தென்கோடி பிறந்தவரே தேசமெல்லாம் ஆண்டவரே
என்கோவம் எம்மேல ஏன்விட்டுப் போனீரோ?

இயற்பியல் பாடம் கற்று ஏறும் விமானவியல்
மயக்கமற கற்றவனே மன்னவனே போனீரோ...

ஏவுகணை கண்டவரே எந்திரங்கள் செய்தவரே
பாவியெமைப் புலம்பவிட்டுப் பரமனடி போனீரோ...

முன்னிருந்த பிரதமரெலாம் முழுபொம்மை தானாக,
.....முதுகெலும்பு கொண்டவரே முழுநாட்டை நிமிர்ந்தவரே;
இன்னும்சில ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசா
.....இளைஞர்கள் ஆக்கிடவே இட்டுசெல நீயிலையே...

வரிப்பணத்தில் வீணாக வெளிநாடு சுற்றாமல்
குறிக்கோளைக் கருக்கொண்டு கடல்கடந்த கொள்கையரே,

செல்லும் இடமெல்லாம் சிறுவர்களை மாணவரை
வெல்லம் என எறும்பு மொய்ப்பது போல் ஈர்த்தவரே,

மேலும்

நன்றி... 31-Jul-2015 5:15 pm
ஆம்! :-( 31-Jul-2015 5:15 pm
கண்ணீர் அஞ்சலி! 28-Jul-2015 6:51 am
நன்று 28-Jul-2015 1:28 am
விசயநரசிம்மன் அளித்த படைப்பில் (public) tamil haja மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Jul-2015 3:20 pm

”விஜய்ய்… போய் ஒரு தேங்காய் வாங்கிட்டு வா, சாங்காலம் டிஃபனுக்குச் சட்னி அரைக்கனும்…” அம்மாவின் குரலைத் தொடர்ந்து நானும் கிளம்பினேன்.

நாலு தெரு தள்ளி ஒரு கடை இருந்தது அங்கேயே சென்று வாங்கலாம் என்று எண்ணியவாறே மெதுவாய் நடந்தேன்.

மாலை வேளை இதமான இளஞ்சிவப்பு சூரியன், காற்றும் குளிர்ச்சியாய் இருந்தது. இந்த சூழலில் சற்று நடக்க எண்ணித்தான் நான் சற்று தள்ளியிருந்த கடையைத் தேர்வு செய்தேன்.

மாலையில் தம் இடத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்த பறவைகளின் கூட்டம் என்னைக் கவர்ந்தது. அவை ‘V’ வடிவில் பறந்து செல்வது என் பெயரின் முதல் எழுத்தை வானில் எழுதியது போன்று இருந்தது. ஆனால் வரவர பறவைகளின் எண்ணிக்கை க

மேலும்

மெய் சிலிர்க்கிறது , மெய்யும் தான் .. 18-Aug-2015 10:06 am
நன்றி... :-) 10-Aug-2015 10:08 am
ஆமாங்க... நன்றி :-) 07-Aug-2015 12:43 pm
விசயநரசிம்மன் - விசயநரசிம்மன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2015 7:09 pm

ரங்கராஜன் தன் சொந்த ஆய்வுக்கூடத்தில் இருந்தான். அவனைச் சுற்றி ஆறு திரைகள், இரண்டு பெரியது, நான்கு சிறியது. அவைக் காட்டிக்கொண்டிருந்த வண்ணக்கோலங்களைப் பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டிருந்தான் ர.ராஜன்.

ரொம்பவும் இல்லாத கொஞ்சமும் இல்லாத சிக்கனமான தேகம், கூர்மையாகப் பார்க்கும் விழிகள், அகன்ற நெற்றி, காதை உறுத்தாத கட்டைக் குரல். ஆங்காங்கு எட்டிப்பார்த்த நரைமுடி இல்லையென்றால் ரங்கராஜனை முப்பத்தைந்து வயதுக்காரன் என்று சொல்லமாட்டீர்கள். மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியன்.

ர.ரா-வின் வேகத்துக்கு அவனது கைக்கணினி ஈடுகொடுக்கவில்லை போல, அவ்வப்போது குறிப்புகளைச் சரளமாய்க் குரல்பதிவும் செய்

மேலும்

நன்றி ஐயா, படித்துக் கருத்திட்டமைக்கும், பகிர்ந்துகொண்டதற்கும்... :-) 05-Jul-2015 3:16 pm
நன்றி... இக்கதை சுஜாதாவிற்குச் சமர்ப்பணம்தான், ஆனால் அதை வெளிப்படையாக சொல்வது கூட அவருக்கும் அவரது வாசகர்களுக்கும் இழுக்கு என்பதால் சொல்லவில்லை! (அவரிடம் இதைக் காட்ட இயலவில்லையே என்ற ஏக்கம் நிறையவே இருக்கிறது எனக்கு!!) 05-Jul-2015 3:15 pm
படித்தவுடன் என் மனதிற்குள் ஒரு விழிப்பு வந்து விட்டு போவதை என்னால் அறிய முடியாமல் இல்லை... மிக அருமையான படைப்பு.... மிக மிக ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 05-Jul-2015 3:44 am
மிகவும் ரசித்தேன்... கூண்டுக்குள் இருப்பவர் கீழே விழுந்து கும்பிடும் போதே உங்கள் யுக்தி புரிந்து விட்டது.... பிரமாதம்.... அந்த ரங்கராஜன்..... வசந்த்.... (சுஜாதா in the background .....?) 04-Jul-2015 10:33 pm
Dheva.S அளித்த படைப்பை (public) vaishu மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
31-Jan-2015 2:41 pm

எழுத்து தளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் & வாசிக்கும் சக நண்பர்களுக்கு,

எந்த ஒரு கட்டுரை, கவிதை அல்லது கதையை நீங்கள் வாசித்த பின்பும் எழுதியவரை உற்சாகப்படுத்த விரும்பும் நமது மனோநிலை இயல்பானதுதான் என்றாலும், மிகச் சாதரணமாய் அல்லது அசுவாரஸ்யமாய் எழுதப்படும் படைப்புகளில் போய் நாம் நட்பு பாராட்டுகிறோம் என்பதன் பெயரில் அந்த ஆக்கத்தை மிகைப்படுத்தி கருத்திடும் போது....

அந்த கட்டுரையை எழுதியவர் தன்னை சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. 40 கருத்துரைகளில் 35 கருத்துரைகள் ஆகா...ஒகோ, அட்டகாசம் என்ற ரீதியில் இருந்து விட்டால் தான் சரியான பாதையில் செல்வதாக அந்த எழுத்தாளர் நினை

மேலும்

படைப்பளானுக்குரிய = படைப்பாளனுக்குரிய 01-Feb-2015 11:08 pm
நீங்கள் சொல்வது மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கது தேவா எஸ் ! ஆனாலும், படைப்பில் குறையிருந்தால் இடித்துரைப்பது போல கடினமாகச் சொல்லாமல், அதன் நல்ல அம்சங்களை முதலில் புகழ்ந்துவிட்டு, குறைகளை நயமாக எடுத்துக் கூறி அதனைத் திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கலாம் ! ஆயினும், ஒரு படைப்பளானுக்குரிய கலைச்சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் நம் கருத்து அமைந்தால் அது நிச்சயம் நலம் பயக்கும் ! இது இத்தளத்திற்கு மிகவும் தேவையான கருத்து தேவா எஸ் ! 01-Feb-2015 11:07 pm
நன்றி உங்கள் அனுபவம் மிக்க கருத்துக்கு, வரவேற்கிறேன் நன்றி தேவா 01-Feb-2015 10:24 pm
வரவேற்கிறேன் தோழர் தேவா...! 01-Feb-2015 9:37 pm
விசயநரசிம்மன் அளித்த படைப்பை (public) ராம் மூர்த்தி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
18-Jan-2015 11:32 am

ஆயிரம் ஆண்டுகள் பின்னும் நிலைக்கும்
வீரியக் கவிதை ஒன்றுளது என்னிடம்,

நாட்டின் நிலையைத் புரட்டிப் போட்டிடும்
நவீனக் கவிதை ஒன்றும் உளது,

ஏழைச் சிரிப்பினில் இறைவனை ஏற்றி
பீடை போக்கும் கவிதை ஒன்றும்

ஏற்றத் தாழ்வுகள் இலாதிவ் உலகை
மாற்றிக் காட்டிடும் கவிதை ஒன்றும்

உழைப்பின் பெருமையை உயர்வின் சிறப்பைத்
தழைக்கும் அன்பைப் போதிக்கும் ஒன்றும்

இமைப்போதும் பிரியா இன்பக் காதலை
அமரக் காதலாய்ப் பாடும் கவிதையும்

இயற்கையும் இறையும் மழலையும் மழையும்
செயற்கை அறிவின் செவிக்குச் சொல்லும்

பாட்டுத் திறத்தால் வையம் முழுதும்
நீட்டும் வானமும் நிலவும் மீனும்

ஆளும் கவிதைகள் ஆயிரம் உண்டு
மா

மேலும்

நன்றி ஐயா... :-) 19-Jan-2015 5:59 pm
நன்றி :-) 19-Jan-2015 5:59 pm
நன்றி... வருகைக்கும் ஆதரவிற்கும்! :-) 19-Jan-2015 5:59 pm
நன்றி... வருகைக்கும், வாக்கிற்கும் :-) 19-Jan-2015 5:58 pm
விசயநரசிம்மன் - விசயநரசிம்மன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Dec-2014 2:15 pm

பள்ளியில் கொடுத்த அந்தப்
பச்சை மரக்கன்றைத் தன்
பிஞ்சுக் கைகளில் பத்திரமாய்
நெஞ்சு நிறைந்த பெருமையோடு
அவன் ஏந்திச்
சென்றுகொண்டிருந்தான்...

அவனது
கைகளில் கன்றைக் கொடுத்து,
உள்ளத்தில் நட்டுவிட்டிருந்தனர்
ஒரு விதையை...

மேலும்

அருமை ! 30-Dec-2014 11:13 pm
விதை விளைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 30-Dec-2014 10:47 pm
அருமை... 30-Dec-2014 7:34 pm
பாராட்டும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்... 24-Dec-2014 1:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (35)

சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
ஆ அருள்

ஆ அருள்

சென்னை
ஹாஜா

ஹாஜா

ஐக்கிய அமீரக குடியரசு
user photo

கோபி சுரேஷ்

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (35)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
vaishu

vaishu

தஞ்சாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (36)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

சங்கர் குமார் மீ

வேட்டரம்பட்டி, திருநெல்வ
மேலே