விதை

பள்ளியில் கொடுத்த அந்தப்
பச்சை மரக்கன்றைத் தன்
பிஞ்சுக் கைகளில் பத்திரமாய்
நெஞ்சு நிறைந்த பெருமையோடு
அவன் ஏந்திச்
சென்றுகொண்டிருந்தான்...

அவனது
கைகளில் கன்றைக் கொடுத்து,
உள்ளத்தில் நட்டுவிட்டிருந்தனர்
ஒரு விதையை...

எழுதியவர் : விஜயநரசிம்மன் (23-Dec-14, 2:15 pm)
Tanglish : vaithai
பார்வை : 389

மேலே