மொட்டைமாடி நிலவு

பாட்டியின் முகம் முழுவதும்
கோட்டோவியங்கள்
காலத்தின் சுருக்கம்.

----------

உடைந்த பிறகும்
கம்பீரமாக இருக்கிறது
புகைப்படத்தில் தாத்தாவின் மீசை.

----------

அப்பாவிற்கு தெரியாமல்
அம்மா தரும் பணம்
அன்பால் அச்சிடப்படுகிறது.

----------

எனக்கு முப்பது வயதாகியும்
இன்னும் குறையவேயில்லை
அப்பாவின் அதட்டலும் மிரட்டலும்.

----------

தீபாவளி பொங்கலன்று
புத்தாடை அணிகையில்
அதில் தாய்மாமன் வாசம்.

----------

என் பால்யத்தை நினைக்கையில்
எங்கிருந்தோ வந்து விழுகிறது
அத்தையின் தாவணி.

----------

மார்கழி மாதம்
மொட்டைமாடி நிலவை ரசிக்கமுடியவில்லை
நீயின்றி நான்.

----------

எழுதியவர் : கோபி சேகுவேரா (28-Dec-15, 9:11 pm)
Tanglish : mottaimaadi nilavu
பார்வை : 218

மேலே