பெருமை
பெயர் பிடித்த-காஞ்சி
கமலப் பட்டு
கலை எழில்உடைத்த-தஞ்சை
பொன் தட்டு
விண் உயர் – ஈத்தாமொழி
இன்பத் தென்னை
மனம் கரைக்கும்-தஞ்சை
இராக வீணை
மேனி மிதக்கும்-பத்தமடை
பஞ்சுப் பாய்
நட்பின் நாயகன் - இராஜபாளையம்
பெரு நாய்
விண் வியக்கும்விழி-சிவகாசி
கைசிவத்த பட்டாசு
கண் பறிக்கும் – கோவை
கூடுவேகா கோரப்பட்டு
தங்கம் பொதிந்த – தஞ்சை
ஒளிர் ஓவியம்
நிலாச்சோறு ஊட்டும்-குறிச்சி
கையுடை அப்பளம்.
ஐந்து முகஅழகு-நாச்சியார்கோவில்
நன் குத்துவிளக்கும்
நாஊற்று நன்படவே-வில்லிபுத்தூர்
பாலமுதம் விழிஅழைக்கும்
தேனி னிமை –குமரி
மண்னருமை மட்டிப்பழம்
இணையில்லா ருசி - சிறுமலை
வாழைப் பழம்
மனம் வசிக்கும்– மதுரை
மண மல்லி
காவிரிமண் உயிர்த்த-தஞ்சை
தலையசை பொம்மை
மெய் மயக்கும் – செட்டிநாடு
இன்பலோக அரண்மனை
பார்க்க நாசிவக்கும்-கும்பகோணம்
பண்பாட்டு வெற்றிலை
நா விழுக்கும் - நெல்வேலி
அமுத அல்வா
அழகு நடை –ஆரூர்
படைத் தேர்
பல் விரும்பும் – மணப்பாறை
மொறுமொறு முறுக்கு
நா முறைக்கும்-சாத்தூர்
அனல்பறக்கும் காரச்சேவு
கோவில் அடைக்கும் – நாகர்கோவில்
நகை யழகு.
இச்சிறப்பு மிகு- தமிழ்நாட்டின்
நன் தமிழழகு.