பாமரன் பரிணமிக்கிறான்

பாமரன் பரிணமிக்கிறான்
உலகிலே
பணத்துடன், ஆளுமையுடன்
ஒரு வழியில்
வசதி மிக்க குடும்பத்தில்
பிறந்ததாலே!
.

நல்வழியில் செல்லாமல்
கோணலாகப் போகிறான்
ஆத்திரத்துடனும் ஆற்றாமையுடனும்
அவனுக்குத் தெரிந்த
தடத்திலே!

பணம் ஒன்றே குறிக்கோளாக
பண்பை என்றும்
நாடாமலே
பயணிக்கிறான் வேகமாக
விளைவறியாமலே!

அழியும் செல்வம்
எத்தனை நாளைக்கு
என்று அறியாமலே
வாழ்கிறான் ஒரு
பதராகவே!

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (6-Sep-16, 11:53 am)
பார்வை : 358

மேலே