பூ பூக்குது
பூ பூக்குது
பூக்கப் போகிறேன்
என்று சொல்லிக் கொண்டு அல்ல.
பூத்த பின்
என்னைப பார்க்க வா
என்று அது அழைப்பதில்லை.
பார்த்து மகிழும்
நமக்கு அது எப்போதும்
செலவு வைப்பதில்லை .
உறிஞ்சும் வண்டுக்கு
தேனை அள்ளி கொடுத்து
விலை கேட்பதில்லை .
எந்த ஒரு விளம்பரம் இல்லை
எந்த ஒரு விளக்கம் இல்லை
எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை .
இலக்கியமும் அவ்வாறே
அமிர்தம் அதுனுள்ளே
கண்டெடுப்பது நமக்குள்ளே.
பொருள் பொதிந்துள்ள
நயம் பொருந்தியுள்ள
கவிதைக்கு தேவை இல்லை
ஒலி பெருக்கியும்,ஒளி வெள்ளமும்.