என் வழியிலே

முகம் காட்டி சிரித்த அழகு
இன்று
முகம் திருப்பி அலக்கழிக்கும் கோலம்
நினைக்கையில்
இது உண்மையா? அது நிழலா?
என்று தோன்ற,
சற்று நிதானித்து நோக்கின்
இதுவம் அல்ல,
அதுவும் அல்ல.
என்று கொண்டு
நேர்மையான எண்ணம்
மனதில் எழும்ப
சற்றும்
அசராமல் செல்கிறேன்
என் வழியிலே!

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (8-Sep-16, 7:10 pm)
Tanglish : en vazhiyile
பார்வை : 1836

மேலே