நல்லவனும் தீயவனாகிறான்

பூ ஒன்று கண்டேன்
ஒளி வெள்ளத்தில்

பொலிவுடன் நிமிர்ந்தது
என்னைப் பார்த்து.

புன்னகையுடன் குவிந்தது
அழகாக .

நெருங்கினேன் ஒலியெழுப்பாமல்
மெதுவாக.

மருண்டது அண்மையில்
என்னைக் கண்டு.

பறித்துப் பிரித்து ஒடித்து
விடுவேனோ என்றாகி

குனிந்தது அருண்டு
சற்று நேரம்.

மனிதனின் நோக்கம்
மலருக்குப் புரிந்தும் புரியாமல்

வன்மையின் துடிப்பை
மென்மை உணர

நல்லவனும் தீயவனாகிறான்
ஒட்டு மொத்தமாகவே!

எழுதியவர் : பூ, வன்மை, மென்மை. (1-Sep-16, 7:02 pm)
பார்வை : 588

மேலே