அப்துல்கலாம்
![](https://eluthu.com/images/loading.gif)
இராமேஸ்வரத்தில்
ஏழையாய் பிறந்தவனே!
பல தடைகளை தாண்டி
விடைகளை தேடி
ஊன்றி நின்றவனே!
தயக்கம் கொண்ட
மாணவர்களிடம்
இயக்கத்தை ஏற்படுத்தியவனே!
தூங்கி கிடந்த மக்களிடம்
உன் வேதங்களால்
விழிக்கவைப்பவனே!
நீ விஞ்ஞான யுகத்தில்
வலிமை மிக்க வீரியவித்து!
எங்கள் பாரதத்தில்
விலைமதிக்க முடியா சொத்து!
உன் எளிமை
வியக்கதக்கது!
உன் பெருமை
போற்றத்தக்கது!
மண்ணை திருத்தியது போதாது
விண்ணை திருத்த
சென்றுவிட்டாயா!
நீ பிரியும் போது
கண்ணீர் வரவில்லை
மனதிற்கு...
நாட்டை உயர்த்த வேண்டும்
என்ற எண்ணம் தோன்றிய
மனதிற்கு...
உன் உருவில்
ஆயிரம் கலாமை காண்கிறோம்
இங்கு!
நீ சென்ற வா
உன் பாதையை நோக்கி
நகர்ந்து கொண்டிருக்கிறோம்
இன்று!
நாங்கள்...