எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனைவருக்கும் வணக்கம் ************************************ நான் உதயா , உங்களோடு...

அனைவருக்கும் வணக்கம் 

************************************

நான் உதயா , உங்களோடு சிறு நேரம் பேச விரும்புகிறேன். நான் இந்த தளத்தில் கிட்டதட்டம் 1 வருட காலமாக உள்ளேன். நான் கவிஞனா ..? என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் எனக்கு தெரிந்தவாறு இதுவரை எழுதியும் , சிலரின் கவிதையை வாசித்தும் இந்த தளத்தில் வளம் வந்துள்ளேன். 

அனைத்திற்கும் தொடக்கமும் முடிவும் நிச்சயம் உண்டு. இந்த கவி தளத்தின் உதித்த உதயா என்கிற நான் , இன்றோடு மறைகிறேன். எனது பயணம் இன்றோடு முடிகிறது. நான் இதை உங்களுடன் சொல்லாமல் கூட செல்லலாம்  என்று தான் நினைத்தேன்.  இருந்தாலும் பிற்காலத்தில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் , "  உதயா என்று ஒருவன் இருந்தானே " என எனக்காக உங்கள் நேரத்தை வீணடிக்கும் விவாதங்கள் இங்கு நிகழ கூடாது என்பதற்காக , நான் சொல்லிவிட்டே செல்கிறேன். 

இங்கு நிறைய கற்றுக்கொண்டேன்  என நினைக்கிறேன். ( நான் இதுவரை பிரபலங்களின் யாருடைய கவிதையையோ கதையையோ படித்தது இல்லை என்பது சத்தியமான உண்மை ), இங்கு தான் கவிதை கதை படித்தேன், கொஞ்சம் எழுதவும் கற்றுக்கொண்டேன்.

இத்தளத்தில் நட்பு சிறகுகளில் நானும் ஒரு இறகு தான், ஆனால் இன்று காற்றின் சுழற்ச்சி கொஞ்சம் அதிகம் என எண்ணுகிறேன், அதனால் தான் நான் கயன்றிவிட்டேன். 

எப்படியோ  எனக்கான மாலை நேரம் வந்துவிட்டது .  நான் மறைந்தே ஆகவேண்டும் என்பது காலத்தின் சுழற்ச்சி. அதே போல்  நான் மீண்டும் விடிய இயலாது என்பது விதியின் சுழற்ச்சி

இந்த தளத்தில் எனக்கு நிறைய சுவாரஷ்ய அனுபவங்கள் நடந்துள்ளது. இக்கணம் நினைத்தால் கூட நெஞ்சில் பூ பூக்கிறது 

சங்கரன் ஐயா
மலர் ஐயா 
கல்பனா பாரதி ஐயா 
பனிமலர் அம்மா 
சாந்தி அம்மா 
யாழினி 
கயல் 
சந்தோஷ்குமார் 
சர்பான் 
அனு ஆனந்தி
பிரியன் 
வெள்ளூர் ராஜா 
பழனிகுமார் ஐயா 
ஆதிநாடா ஐயா 
ஜின்னா 
மணி மீ 
காளியப்பன் ஐயா 
நிலா கண்ணன்
மனோ 
கிருஷ்ணதேவ் 
ருத்ரா 
சியாமளா அம்மா 
அர்ஷத் 
அமரா 
முதல் பூ 
பாத்திமா 
கார்த்திகா 
செல்வமுத்தமிழ் 
மீனா 
கிருத்திகா ரங்கநாதன் 
சுஜய் ரகு 
ராஜன் ஐயா 
கருணா ஐயா ................

இன்னும் இந்த பட்டியல் நீளும் எனக்கு தான் இப்போது ஞாபகம் வரவில்லை . இவர்கள் அனைவரும் .. என் கவியில் கருத்திட்டோர் .... இன்னும் சிலரின் பெயர் மறந்துவிட்டது மன்னிக்க  

 அகன் ஐயாவை எப்படியாவது என் கவியில் கருத்திட வைக்க வேண்டும் என்று எண்ணி ..  ஏக்கத்தோடு கவிகளை எழுதி கொண்டேன் இருந்தேன் ...   அதுவும் ஒரு நாள் நிறைவேறியது ... நான் தனிமை பற்றி எழுதிய ஒரு கவிக்கு அவரின் கருத்து கிடைத்தது .
 
இப்படி இப்படியாக சுற்றி திரிந்த ..  உதயா என்கிற நான் .. இன்று முதல் தொலைந்து போகிறேன்  ...
 
காரணம் - என்  வாழ்வின் சுழற்ச்சிக்குள் உள்ளது .அதை இங்கு வெளிப்படையா சொல்ல எனக்கு விருப்பம் இல்லை .

நான் செல்கிறேன் தோழர்களே/தோழமைகளே .....

( தோழர் ஜின்னா...  என்னை மன்னிக்க என்னால் ஹைக்கூ தொடரில் பங்கு பெற இயலாது )
 
- உதயா 

பதிவு : உதயகுமார்
நாள் : 11-Feb-16, 1:50 pm

மேலே