எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வணக்கம் நான் உதயாவின் அண்ணன் என் தம்பியின் இறுதி...


வணக்கம் 

நான் உதயாவின் அண்ணன்
என் தம்பியின் இறுதி கவிதை
 --------------------------------------------
சூரியனே இல்லாத வானம் 
காற்றே இல்லாத பூமி 
தாகத்தை தீர்க்காத தண்ணீர் 
இருந்தும் பயனற்றுப் போவதால் 
இன்று கானலாகிக் கொண்டிருக்கிறது 

அர்த்தமற்று வாழ்ந்து 
கடந்துவந்தக் காலங்களில் 
கடைசி ஈராண்டு காலத்தில் 
என்னை மூச்சாய் பேச்சாய் 
எடுத்துக்கொண்டு வாழ்ந்தவள் 
இன்று ஒய்ந்துவிட்டாள் 

அவள் நடமாட்டம் 
ஒடுங்கியப் பின்னும் 
அவளுள் ஓங்கி இருந்தது 
"உதய் உதய் மாமா மாமா"
என்று என்னை உச்சரிப்பது மட்டும்

என்னை அவள் 
உச்சரிக்கும் போதெல்லாம் 
அவள் தந்தையிடமிருந்து 
அடி உதைகள் அர்சனையாக 
அவளுக்கு அரங்கேறிக்கொண்டிருக்கும் 

ஆனால் அவளோ 
இந்த பாவியை 
இன்னும் இன்னும் 
அவள் உயிரோடும் மூச்சோடும் 
இறுக்கிக் கொண்டே வாழ்ந்தாள்

ஒவ்வொருமுறை 
தொலைபேசி அழைப்பிலும்
 " மாமா நான் உன்ன கடைசியா 
ஒரு முறை தொட்டு பாக்கணும் ..
உன் நெஞ்சில படுக்கணும் டா "
என்ற அவளின் கடைசி ஆசையை கூட 
"  அடுத்த மாசம் வரன் டி "என்று 
சமாதனம் படுத்திய 
இந்த பாவியை பார்க்காமலே 
சென்று விட்டாள்

நான் கல்லூரி முடித்துவிட்டு 
மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வரும் வரை 
" அக்கா மாமா வந்துட்டு இருப்பாரு 
போன் பண்ணு அக்கா ." என்று 
அழுது ஒரு சின்ன குழந்தைப் போல 
அவளின் அக்காவிடம்( என்அண்ணியிடம்)   
ஆர்ப்பாட்டம் செய்தவள் சென்று விட்டாள் 

இனி யார் என் அண்ணியை 
இப்படி தொல்லை செய்வார்கள் 
என் அண்ணி எப்படி 
அவளின் இழப்பை தாங்கி கொள்கிறாள்
எப்படி என்னையும் அலைபேசியில் 
சமாதனம் படுத்துகிறாள் 
எனக்கு தெரியவில்லை 

நான் வீட்டிற்கு வந்ததும் 
அலைபேசியில் அழைத்தவுடன்
" மாமா .... மாமா வந்துட்டியா மாமா ..
ஐஐஐஐஐஐஐஐஐஐஐ .........அக்கா 
என் உதய் வந்துட்டான்
டேய் உதய் சாப்டியா டா பொருக்கி
 உம்மா செல்லம் 
உம்மா குட்டி பாப்பா "  
என்று இனி யார் என்னை 
முத்தமிடுவாள் எனக்காக காத்திருப்பாள் 

நான் கடைசியாக அலைபேசியில்
பேசும் போது கூட எதற்கோ அழுதேன்
"  மாமா உன் நகம் கட் பண்ணாக் கூட 
உன் பொண்டாட்டி தாங்க மாட்ட டா 
இனிமே நீ அழுதா உன் பொண்ணாட்டி 
செத்து போயிடுவ இது உன் மேல சத்தியம் " 
என்று என்மேல் அவ்வளவு பாசம் வைத்திருந்த 
என் குழந்தையை என் மனைவியை 
என் கண்ணீல் காட்டாமல் கூட 
எரித்து விட்டார்களே 

" செல்லம் மாமா வர டி உன்கிட்ட 
மாமா இல்லாம நீ எப்படி தனியா இருப்ப " 

அண்ணி அண்ணி 
எனக்கு இப்பொழுது 
உங்கள் நினைத்தால் தான் 
கவலையாக உள்ளது 

எனக்கும் தெரியும் 
நீங்கள் எனக்காகவும் 
உங்கள் தங்கைக்காகவும் 
செய்த தியாகங்கள் 

என் மனைவியின் 
சடலத்தை நான் பார்க்கா
 நீங்கள் யார் யாரோ 
கால்களை பிடித்து 
எனக்காக கண்ணீர் வடித்தும்  
அனைத்தும் பயனற்றுப் போனது 

" அப்பா அம்மா 
அண்ணா தங்கச்சி "
என்னவென்றே தெரியவில்லை 
இன்று என்னுள் ஒரு நெருடல்

என் மனதிலும் இதயத்திலும் 
எதோ ஒன்று நடக்கிறது 
எனக்கு சொல்ல தெரியவில்லை 
உறக்கம் வேறு வருகிறது 

நான் நிச்சயம் தற்கொலை 
செய்துக்கொள்ள மாட்டேன் 
இருந்தாலும் ஏன் இன்று விரைவாக 
என்னுள் சோர்வு பரவுகிறது 
ஏன் என்னுள் .... 

இது என் தம்பி இறுதியாக எழுதியது. இரவு உறங்கும் முன் , அவனது லேப்டாப் -  ல் எண்ணம் பகுதியில் அவனே டைப் செய்துவிட்டு உறங்கி விட்டான் ( இறந்துவிட்டான் ). எனக்கு கவிதை எல்லாம் எழுத தெரியாது , அவள் எழுதும் போது பார்ப்பேன். எனக்கு அவன் எழுதுவது அவ்வளவு புரியாது.

என்னை டைப் செய்யணும் னு தெரியாமலே டைப் செய்கிறேன். உங்களுக்கு தெரியுமா என் தம்பி எவ்வளவு பெரிய பலசாலி திறமைசாலி என்று கடந்த வருடம் கூட காரில் எதோ ஒன்று புதிதாக ஒரு சிஸ்டம் கண்டுபிடித்தான்.  எவருக்கு பயப்பாடதவன் , அன்புக்கு மட்டும் கட்டுப்பட்டவன். பலரின் நலத்தை கருதுபன் 

எல்லாம் இன்று முடிந்தது . முடிந்துவிட்டது ....

உறங்குவதைப் போலவே படுத்துக் கொண்டிருக்கிறான் 
என் தம்பி.. தம்பி ...

பதிவு : உதயகுமார்
நாள் : 12-Feb-16, 11:27 am

மேலே