ஹா ஹா ஹா காதல் - ஆனந்தி

எழுதுவதெல்லாம் கவிதை
அல்ல என எண்ணியிருந்தேன்
உன்னை எழுதும் வரை....
--------------------------------------------
உயிர் கரையுமா சத்தியமாய்
சாத்தியம் தான் நம்புகிறேன்
உன்னை கண்ட பிறகு.........
----------------------------------------------------
வரங்கள் சாபமாகவும்,
சாபங்கள் வரமாகவும்
முரண்படுவது இந்த காதலில்
தானோ???
பார்க்கும் போதே இமைக்கவும்
செய்கிறது - உன் கண்கள்
--------------------------------------------
என்ன விந்தை
இடியும் இசையும்
மாறி மாறி
வருவது நீ தானே......
-------------------------------------------------------
விசித்திரமான தருணம்
நீ நான்
காதல் சாத்தான்
முடிவு செய்ய வேண்டியது
நீயே தான்
-------------------------------------------------------
நீ துப்பி விட்டு போகிறாய்
நானோ தூவான மழையில்
இடைவிடாது மழலையாய்
-----------------------------------------------
காலியான பிச்சை பாத்திரம்
நீட்டவா?
அதில் நிரப்பி கொடு
உன் சாபத்தையாவது
-------------------------------------------------------

எழுதியவர் : ஆனந்தி.ரா (8-Feb-16, 9:43 pm)
பார்வை : 140

மேலே