உதயகுமார்- கருத்துகள்
உதயகுமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [37]
- மலர்91 [25]
- Dr.V.K.Kanniappan [20]
- தருமராசு த பெ முனுசாமி [19]
- ஜீவன் [18]
ஆரம்ப ஹைக்குகள்
சிந்தனையை தூண்டி
ஒரு வழி செய்கிறது
வாசகனை
பாதியை நெருங்கி
தாண்டி
இறுதியை நெருங்கும் வரை
நிதர்சனங்களை
அலசுகிறது
ஹைக்குகள்......
வித்தியாசமான படைப்பு சார்
வாழ்த்துகள் ....
ஓடிக்கொண்டிருக்கும்
இரயிலோடு ...
தோற்றுப்போகும் நிலவு .....
ரசனை அழகு சார் ..
பட்டமும்
அடகுக்கடை ரசீதும் ..
நடுத்தர .. வர்கத்தின் நிதர்சனங்கள் ..
பாடமும்
சிறுவனும்
கவனச்சிதறல் ...
சிக்னல்
சிறுமியின் காத்திருப்பு ....
இங்கு ..... பல சிந்தனை தூண்டுகிறது ( சிலருக்கு பாடம் எடுக்கும் அளவிற்கு )
கையுறை
திறக்கப்படும் கண்ணாடி
முதல் அழுகை .....
வாசகனை ஒரு நிலையில் நிறுத்தி ..... பிறகு அடுத்தப் பத்திக்கு செல்ல செய்கிறது
இப்படி ... இப்படியாக .....
ஒரு ஹைக்கூ படையல் முழுமை பெற்றிருப்பது ...
மிகச் சிறப்பு சார் ....
வாழ்த்துகள் ...
ம்ம்ம்ம் ...
மிகச் சிறப்பு ...
வாழ்த்துகள் ...
மிக அற்புதமான கவிதை ஜி
ஒவ்வொரு பத்தியும் ...
வியப்பில் நீண்டுக்கொண்டே இருக்கிறது .....
ஹா ஹா ஹா ஹா ......
தனியா தாகத்தில்
தெளியா மயக்கத்தில்
குறையா அன்பினில்
இன்னும்
மிச்சமாய்
மேன்மையாய்
வாழ்ந்துக்கொண்டிருக்கும்
காதலருக்காகவே
வந்துக்கொண்டிருக்கிறது
காதலர் தினம்
( காதல் உடையணிந்தவருக்காக வருவதில்லை )....
ஒரு நுணுக்கமான கவிதை ....
வாழ்த்துகள் ..
ம்ம்ம்ம்ம் ...
வாழ்த்துகள் ...
உனக்குள்ளே
சுற்றி திரியும்
கூடை காரன்
அவன்
கூடையின் ஓரத்தில்
நின்று அறுபொருலாய்...
உன்னை
அறுத்து அறுத்து
பூக்கலாக
உனக்குள்ளே
விற்றுதிரியும்
அந்த
கவிதைகாரனின்
நினைவுகளை ரசித்தேன் ....
வாழ்த்துகள் ...
இந்த நதியோட்டத்தில்
நான் உள் நீச்சல்
அடித்துக்கொண்டிருக்கிறேன்
அண்ணா ......
ஆனால் எனக்கு
மூச்சு திணறவில்லை ...
முத்துகளை கண்டு ரசிக்கையில் .....
மிக அருமை அண்ணா ...
வாழ்த்துகள் .....
எதையும்
குறிப்பிட்டு சொல்ல முடியாது
குறிப்பிட்டு சொல்லிவிட்டு தப்பிக்கவும் முடியாது
அனைத்துமே மிக அருமையான ஹைக்கு தான் ஐயா
மிக ஆழமான அழுத்தமான சமூக சாடல்கள் ....
மேலும்
ஹைக்கூவைப் பற்றிய சில அறிய தகவல்கள் ....
மிக பலமான
தொடக்கம்
ஹைக்கு தொடர் .....
வாழ்த்துகள் .....
வருகைக்கு மிக்க நன்றிகள் தோழமையே ......
மிக அழகான படம் ....
தொடரின் தலைப்பும் மிக அழகு ....
நதிகள் இனிதே பயணிக்கும் ........
வாய்ப்பளித்த தோழர் ஜின்னா அவர்களுக்கு நன்றிகள் ...
பங்கெடுக்கும் சக படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள் ...
" ஒரு ஹைக்கூ வை எப்படி வாசிக்க வேண்டும் என்பது கூட , ஹைக்கு எழுதுபவர்களுக்கு தெரியவில்லை " என்ற தோழர் ஜின்னா தனது எண்ணப் பகுதியில் பத்திருந்தார் என்பது தான் உண்மை ...
தமிழியில் எவ்வாறு தமிழ் சங்க வைத்து வளர்க்கப்பட்டதோ அது போல ஜப்பானிலும் ஹைக்கூ சங்கம் வைத்து வளர்க்கப்பட்டுள்ளது என்பது உண்மை . கிட்ட தட்ட ஒவ்வொரு சில கால வருடத்திற்கு , ஒவ்வொரு விதிமுறைகள் கையாளப்பட்டுள்ளது என்பதும் உண்மை . கையாளப்படும் விதிமுறைகள் வாசகர்களை கவராததால் , 5 முறைகள் ஹைக்கூ விற்கு விதி முறைகள் மாற்றப்பட்டுள்ளது .. 6 வது முறையாக மாற்றப்பட்டும் இதுவை பின்பற்று விதிமுறைதான் 5,7,5 ஆகா மொத்தம் 17 சீர்கள் வருதாகும் . ஆனால் இந்த விதிமுறை தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயன் படுத்த வில்லை என்பது உண்மை ..
இதை தவிர்த்து ஹைக்கூ எப்படி எழுத வேண்டும் என்பதை தோழர் ஜின்னாவின் எண்ணம் தெளிவாக சொல்கிறது ...
ஹைக்கூ என்பது
குளத்தில் விட்டெறியப்படும் கல்...
அவ்வளவு தான் ...
மேலும் ஹைகுவியை எழும் மற்றும் பார்க்கும் கோணம் ....
மனைவி துணிகளைச் சலவை செய்துகொண்டிருந்தாள். என்னிடம் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை துணி துவைக்கும் இடத்திற்குச் சென்று சோப்புக் குமிழிகளால் ஆன நுரைகளை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். நான் மனைவி துணி துவைப்பதை ரசிப்பதை விட்டுவிட்டு குழந்தையின் விளையாட்டை ரசிக்கத் துவங்கினேன். மனைவி குழந்தைக்கு சோப்பினால் உண்டாக்கப்பட்ட பெரிய நுரைக் குமிழிகளை உண்டாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்க குழந்தை அதை வைத்து விளையாடியும் குமிழி உடையும்போது அழுது புதியதாக வேறொரு குமிழியை வாங்கிக் கொண்டு விளையாடுவதாகவும் இருந்தான். அவனே குமிழியை உண்டாக்கவும் கற்றுக் கொண்டான். ஒரு ஹைக்கூ தோன்றியது:
உண்டாக்கி உடைத்து
அழுது மகிழ்ச்சியடையும்
சலவைக்குமிழியுடன் குழந்தை (1)
குழந்தை விளையாடும் குமிழிகளை உற்று நோக்கும்போது அக்குமிழியில் உலகமே தெரியத்தொடங்கியதாக உணர்ந்தேன். சிறு புல்லின் மேல் படியும் பனித்துளியில் எவ்வாறு நீண்ட பனை மரம்/ தென்னை மரம் தெரிகிறதோ அதுபோலவே சோப்பு நுரைக் குமிழியில் மேகம் முதற்கொண்டு பலதும் தெரியத்துவங்குவதைக் காண முடிந்தது. குழந்தை குமிழியை உடைக்கிறான். குமிழி உலகமாகக் காட்சியளிக்கிறது. இப்படி ஒரு ஹைக்கூ தோன்றியது:
உலகை உடைத்து
விளையாடும் குழந்தை
சலவைக் குமிழி (2)
உலகம் ஏதோ ஒன்றின் காரணமாகத் தோன்றி வளர்ந்திருக்கக்கூடும் சோப்புக் குமிழி வளர்வதுபோல. தோன்றிய உலகம் அழியவும் கூடும் என்று சிந்தை விரிய ஒரு ஹைக்கூ:
வளர்ந்த உலகம்
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் (3)
சலவைக் குமிழியை உண்டாக்கியதால் உடைந்தே தீரும். அதன் அழிவுக்கு குழந்தைக் காரணமாக இருக்கிறது. உலக அழிவோடு அதை ஒப்பிட ஒரு ஹைக்கூ:
உலகம் அழியும்
உண்டாக்கியதால்
அணுகுண்டுகள், அணு உலைகள் (4)
குழந்தை ஆசையாசையாய் குமிழியை உண்டாக்குகிறது. அதை நினைத்து பெரிய கனவு காண்கிறது. கனவு நிஜமாகாமல் குமிழி உடைகிறது. இதை வாழ்க்கையோடு ஒப்பிட ஒரு ஹைக்கூ:
சேர்த்த ஆசைகள்
சிதறுதேங்காயாகிவிட்டது
மரணம் (5)
இதில், நம் வாழ்க்கையில் எவ்வளவோ ஆசைகளைச் சுமந்து இப்படியெல்லா மோ வாழ வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் அவ்வாறு வாழ முடிவதில்லை. மரணம் என்பது சாவை மட்டுமே குறிக்காது. அது நிறைவேறாத ஆசைகளையும் குறிக்கும். மரணம் என்பது மேற்கண்ட ஹைக்கூவில் குறியீடு. வாசகன் நினைக்கும் பல பொருளையும் அது குறிக்கும்.
குழந்தை உண்டாக்கும் குமிழியைப் பார்க்கிறேன். உலகத்தோற்றம் நினைவுக்கு வருகிறது. பைபிள் கருத்தையும் இணைத்துக்கொள்ள ஒரு ஹைக்கூ இப்படி பிறக்கிறது:
மண்ணினால் உருவம்
மூச்சடைத்ததால் மரணம்
குமிழி உண்டாகி உடையும் (6)
ஹைக்கூ ....
பறந்து விரிந்த
ஆழமான அழுத்தமான கருத்தை
3 வரிகளில் சொல்வதாகும் .....
ஒரு சேல்ஸ் மேன்
இங்கு புலம்பி விட்டு போகிறான்
உணர்வு குறையாத
உயிரோட்டமானப் படைப்பு
வாழ்த்துகள் ஆனந்தி ....
ம்ம்ம்ம் ....
வாழ்த்துகள் ....
வாலியைப் பாடும் கவி ...
சிறப்பு ...
கொஞ்சம் பிழைகள் உள்ளது
கவனிக்கவும் .....
வாழ்த்துகள் .......
அவள் வர மாட்டாள் ஐயா
ஏனெனில் அவள் தான் சொப்பனச் சுந்தரி ..
ஹா ஹா ஹா ஹா ....
வாழ்த்துகள் ஐயா ....
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழரே ..
வருகைக்கும் ரசனையான கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஆனந்தி ...
வருகைக்கு கருத்திற்கு மிக்க நன்றிகள் தோழரே ..