கனவு நதிக்கரையில்

கனவு நதிக் கரையில்
ஒரு கவிதை போல் நடந்து வந்தாள்
நெஞ்சின் அலைகளில்
வான வில் வண்ணங்களை தூவிச் சென்றாள்
இன்னும் வரவில்லை நேரில்
ஆவலில் நான் காத்திருக்கின்றேன்
அந்த இரவுக் கனவையும்
அதன் பின் அவள் தொடர்வதில்லை
காரணம் ஏதும் சொல்லவில்லை
தயையை மறந்து விட்டாளோ தோழி
தனிமைத் துயரில் நான் வாடுகிறேன் !
___கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Feb-16, 6:36 pm)
பார்வை : 548

மேலே