பூக்கூ
கவிதைக் கூடையில்
பூக்கள் சிரிக்கின்றன
காதலர் தினம் !
கனவுத் திரையில்
வானவில் கோடுகள்
காதலர் தினம் !
இதழ் விளிம்பினில்
அரும்பும் சுய புன்னகை
காதலர் தினம் !
தோள்களில் மிதக்கும் துப்பட்டா
துள்ளித் திரியும் கால்கள்
காதலர் தினம் !
வசந்த மலர்களின் வரவேற்பு
நினைவுகளில் எல்லாம் கனவுகள்
காதலர் தினம் !
பூக்கள் சிரிக்கின்றன தோட்டத்தில்
புன்னகையில் மலர்ந்து சிரிக்கிறாள் இவள்
காதலர் தினம் !
தாவணியில் நடக்கும் தென்றல்
மார்கழிக் கோலம் மனதினில்
காதலர் தினம் !
ஆண்டில் நடக்கும் மாதங்கள் பன்னிரண்டு
சித்திரை வைகாசி தை கை பிடிக்க
காதலன் வரும் தினம் !
---கவின் சாரலன்
பூக்கூ ----பூக்கூடை என்றும் சொல்லலாம் .
சப்பானிய அக்கா ஹைக்கூவின் தங்கச்சி என்றும் அழைக்கலாம்
ஹாய் ஹைக்கூ அக்கா !
வாடி என் வடிவுக்கரசி பூக்கூ தங்கச்சி !