அர்த்தம் இல்லாதவைகள் - ஆனந்தி

நான் நானாகவும் இருக்கிறேன்
நான் நீயாகவும் இருக்கிறேன்
---------------------------------------------
நடக்கின்ற பூ வனம் நீ
நடமாடும் கல்லறை நான்
---------------------------------------------
"உன்னை பிடிக்கவில்லை"
என்று நீ சொன்ன சொற்கள்
வார்த்தை பிழைகள் தானே
----------------------------------------------
இனி தவணை முறையில்
மரணம் எனக்கு
என் கைபேசியில் உன்
புகைப்படம் பதிவிறக்கம்.......
-----------------------------------------------
நீ பார்த்த நொடிகளுக்கா,
நீ பார்க்க இமைத்த இமைகளுக்கா,
எதற்கு தர தண்டனை
எதற்கு தர பரிசு
----------------------------------------------
வாட்சப் திரைக்குள் எப்போது
வந்து சேருவாய்
நெருங்குகிறேன் நொடிக்கு
நூறு முறை நீ எப்படி....
-----------------------------------------------
உன் நினைவுகளை
தூக்கிப் போட்டும் பின்பு,
பிடித்தும் விளையாடுகிறேன்
இடைப்பட்ட வெளியில்
(வலிப்பட்டு) இன்னும்
மிச்சமுள்ளது என் காதல்
------------------------------------------------------
நேசத்தின் விளிம்புக்கு
அப்பால் பள்ளம் அல்ல- குழி தோண்டு
இனி நான் வாழ்வது
உறுதி இல்லை.....
-----------------------------------------------------
கனத்து போனது மனம்
காரணம் நீ தான்
கவித்துவமாகி போனது மனம்
இதற்கும் காரணம் நீ தான் ......
-------------------------------------------------------
நீ இல்லா நாட்கள் இனி எப்படி
இப்படி நான் நினைத்துக்கொண்டிருப்பதே
என் கல்லறையில் தானோ..........
-----------------------------------------------

எழுதியவர் : ஆனந்தி.ரா (7-Feb-16, 11:10 pm)
பார்வை : 343

மேலே