சேல்ஸ் மேன் - ஆனந்தி

'டார்கெட்' என்ற
வார்த்தைக்குள்ளாகவே
முடிந்து விடுகிறது
எங்களின் வாரங்கள் மட்டும்
வரங்களாய்....

எதை நோக்கியோ
ஓடுகிறோம் தினம் தினம்.
சட்டைப்பைக்குள்
ஒளிந்திருக்கிறது ஓராயிரம்
கனவுகள்.....

நாக்கில்லா மனிதர்கள்
தலையசைப்பில் மறுத்தலும்
செவியில்லா மனிதர்கள்
கண்ணசைப்பில் மறுத்தலும்
அரங்கேறிடத்தான்
செய்யும் தினம் தினம்.....

ஓங்கி அடிக்கும்
துவைக்கல்லின்ஆடைகளாய்
எங்களது நிலையும்....

பொழுதெல்லாம் கையில்
'செல்' லுடன் திரியும்
நாங்கள் தான்
'நவீன சரஸ்வதி சபதன்கள்'....

உயிரின் துள்ளல்
உங்களது நாக்கிலோ?
காது புளித்தது.
காணாமல் போகாத எங்களின்
கனவு குறித்து கவலையா
எவருக்கேனும்?.....

எல்லா உயிர்களையும்
தன்னுயிர் போல எண்ணிடுங்கள்
போதுமானது....

கவலையில்லையா?
விட்டுவிடுங்கள்.
பட்டணத்து குப்பைத்தொட்டியில்
புதைத்தாவது விடுகிறோம்
எங்களின் கனவுகளை
மொத்தமாய்.....

எழுதியவர் : ஆனந்தி.ரா (2-Feb-16, 10:13 pm)
பார்வை : 91

மேலே