இதுவும் காதல் தான் - ஆனந்தி
புதன் கிரகம் சென்று விடு
அங்கு தான் நிலவுகள் இல்லையாம்.....
--------------------------------------------------------
உன்னை செல்லமாய் அழைக்கவா
என் பெயரை சொல்லி ...........
--------------------------------------------------------
நீ என்னை கடந்து போகிறாய்
நானோ வானில் மிதந்து போகிறேன்
--------------------------------------------------------
சிகை அலங்காரம் சீர் பெறுகிறது
நீ செய்கையில்
--------------------------------------------------------
கண நேரம் நிதானித்து
சுயக்கண்ணாடியை நோக்கினேன்.....
அதில் என் பிம்பமாய் நீ ........
--------------------------------------------------------
நீ என்னை கடந்த பிறகு இருள்
உன்னை பின் தொடர்கிறது வெளிச்சம்
--------------------------------------------------------
சுந்தரவனத்தில் புதைக்குழி உண்டாம்
பாவம் உன் கன்னக்குழி
பார்க்காதவர்கள் சொல்வது...
--------------------------------------------------------
நீ
காதல்
அழகு
சொல்வதுற்கு இனி என்ன ...................