மக்களாட்சியா - கற்குவேல் பா

முன்பொருநாள்
குறுநில மன்னர்கள் இருந்தனர்;
அவர்களிடத்தில்
இரத்தினங்கள், மணிகள்,
வைரங்கள், வைடூரியங்கள் இருந்தன;
ஆட்சியும், அதிகாரமும்
அவர்கள் கையிலே இருந்தது ..

பின்னொருநாள்
மக்களாட்சி என்றனர்;
இருக்கட்சி ஆட்சிமுறை அமைத்தனர்;
ஆங்கும்,
பணம் படைத்தவர்களே
மந்திரிகளாக வலம் வந்தனர் ..
இதுவும்
மன்னராட்சியா என்று கேள்வி எழுப்ப,
மக்களால், மக்களுக்காக, மக்களே என்று
பதிலுரைத்து, பல்லிளித்துச் சென்றனர் ..

தயவுசெய்து,
மார்க்ஸின் கல்லறையை தட்டாதீர்கள்;
அவர் தேவை இல்லை எங்களுக்கு ..
அருகே,
அமைதியாய் உறங்கும் - அந்த
குறுமீசை சர்வாதிகாரியை எழுப்புங்கள்..
எடுக்கப்பட வேண்டிய களைகள்,
இங்கே கணக்கில்லாமல் !

#ஏற்புடையதெனில்_பகிருங்கள்

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (8-Aug-16, 4:51 pm)
பார்வை : 406

மேலே