கவிதை தொக்கு -7

பூமி..

எலேய் சின்ராசு
எவ்வளவு அழகா இருந்தேன்டா
பச்சை பசேல்ன்னு கெடந்தேன்டா
மூலிகைத்தாவரம் பல தந்தேன்டா..

செதுக்கிய சிற்பமும்
வரைந்த ஓவியமும்
பொக்கிஷமா வச்சிருந்தேன்டா
எல்லாத்தையும் அழிச்சிட்டீங்களேடா..

வனங்களை அழிச்சி
பல உயிர்களை கொன்னு
அடுக்கு மாடிங்க கட்டுறேன்னு
அஸ்திவாரத்தையே அழிச்சிட்டீங்களேடா..

நான் வறண்டுட்டேன்டா
பூவெல்லாம் கருகிடுச்சுடா
ஜோரா வளர்த்த மரம்
சுக்கு சுக்கா கெடக்குதுடா
பத்து மரம் நட்டாலும்
வெட்டுன ஒத்த மரத்துக்கு ஈடாகுமாடா...

சொர்க்க பூமியா இருந்தேனே
என்னையே அழவச்சிட்டீங்களேடா
நான் அழுது குலுங்கையிலே
கடலம்மா பொங்குறாடா
ஒன் உசுர எடுக்குறாடா...

என்னத்த சொல்ல‌
வயல்களை அழிச்சதனால‌
வாழ்வாதாரமே போச்சுடா
எப்படியோ போங்கடான்னு
விட முடியல‌
சுத்திக்கிட்டே இருக்கேன்டா..

நான் நின்னுட்டா...???

கவிதை தொக்கு தொடரில் எழுத வாய்ப்பளித்த தோழர் கவிஜி அவர்களுக்கு நன்றி..

எழுதியவர் : வே புனிதா வேளாங்கண்ணி (22-Apr-16, 1:09 pm)
பார்வை : 205

மேலே