சாமி மாடு

எனக்கென ஏதுமில்லை
ஊருமில்லை உறவுமில்லை
உயிர் துறக்க வீடுமில்லை
பகலிரவாய் பாடுபட்டும்
பட்ட கடன் தீரவில்லை
கட்டிவைத்த கோட்டையிலே
காவலில்லை கதவுமில்லை - அங்கு
ஏற்றி வைத்த தீபத்திலே
என்னையில்லை திரியுமில்லை
பூத்த மலர்க்காடு வாசமில்லை
பூரண நிலவோடும் நேசமில்லை

தாகம் தணியுமென மான் தாவித்துடித்தது
வற்றாத கடல் அதை வாரி அணைத்தது
மேகம் கனிந்ததென மயில் தோகை விரித்தது - அதன்
கண்ணை குறிவைத்து ஒரு மின்னல் தெறித்தது
கோவில் பசுமாடு பாலை சுரந்தது - ஒரு
குண்டாந்தடி அதை மண்டை பிளந்தது

விதி வகுத்த பாதை வெற்று மணல் பாலை - என்
கால் பதித்த சுவடேதும் காணவில்லை
பூத்து உதிர்ந்தது காட்டினில் முல்லை - அதில்
பொங்கிய வாசம் காற்றிலும் இல்லை
கூப்பிடுதூரம் கூற்றுவன் எல்லை
கூவி அழைத்தும் அவன் கூப்பிடவில்லை
- நரியனுர் ரங்கு செல் : 9442090468

எழுதியவர் : நரியனுர் ரங்கநாதன் (22-Apr-16, 3:10 pm)
Tanglish : saami maadu
பார்வை : 114

மேலே