காதல் இது

பேருந்தில் சன்னலோரம் தான் அவளின் இருக்கை...
இயற்கையை கண் இமைக்காமல் ரசித்து
மெல்லிசையோடு
சன்னலின் வெளியே தென்றலை வருடுவதும்
மழையை ரசிப்பதும்
அவளுக்கு மிகவும் பிடிக்கும்
அவள் ரசிப்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
அவள் விரலோடு என் விரலை கோர்த்துக் கொண்டேன்.
அவளும் இறுக்கமாக கோர்த்துக் கொண்டாள்.
வேண்டுமென்றே
அவள் அருகில் இருந்த என் கைபேசியை எடுக்க அவள் மடியில் விழுந்தேன்

என்ன பண்றீங்க சார்.
செல்போன் எடுக்கறன்டி.
என்ன கேட்டா
நான் எடுத்துத் தந்திருப்பனே சார்.
உனக்கு ஏன் சிரமம்.
ஹா ஹா...
என்ன ஒரு கரிசனம்...

ஹா ஹா...

எடுத்துட்டீங்களா ..
எழுந்திருங்கோ
பின்னாடி நம்மளயே பாக்குறாங்க...வெக்கமா இருக்கு...
யார் பாத்தா என்ன ?
நீ என் பொண்டாட்டி ...

சரிங்க சார்...
வீட்ல போய் என் மடியிலயே கிடங்க
இப்ப எழுந்திருங்க...
என்று வாய் தான் சொன்னது.
மனம் இப்படியே மாமா என் மடியில் இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டது.
அதற்கு ஏற்றாற் போல்
அவர் மீதிருந்து அவள் எழவில்லை.

எழுந்திரு எழுந்திரு என்று அரை மணி நேரமா சொல்ற ஆனா
நீ எழுந்தா தானே நான் எழுந்திருக்க முடியும் கள்ளி...எனும் பொழுது
அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
சட்டென்று மின்னல் வெட்டியது போல் முத்தமிட்டாள்.
மனசுல இம்புட்டு ஆசைய வச்சிக்கிட்டு நடிக்கிற பிரபா...

ஹா ஹா...
பின்ன நாங்களே வலிய வந்து ஆசைய வெளிப்படுத்துவோமா...
பெண்களுக்கு ஆண்களை விட
வலி அதிகம்...
உணர்வுகள் அதிகம்...
காதல் அதிகம்...
உணர்ச்சிகள் அதிகம்...
ஆசைகள் அதிகம்...மாமா.....

ம்ம்...

உன் ஆசை என்ன மேடம்...

வாழ்க்கை முழுக்க உன் விரல் பிடித்து வாழ வேண்டும்...
விழும் பொழுது உன் மடியில் விழ வேண்டும்...

ஐ லவ் யூ சோ மச் ..... பிரபா...

என் கையை அவள் இதயத்தில் வைத்து ஒரு புன்னகை புரிந்தாள்...
அதில் தான் என்ன ஒரு மாயம் செய்தாள்..

இருவரும் ஒருவரிடம் இருந்து ஒருவர் பிரிய மனம் இல்லாமல் எழுந்தனர்.

இருவரும் ஒருவரை ஒருவர்
கண்ணோடு கண் பார்த்துக் கொண்டே இருந்தனர்
நேரம் ஆக ஆக
இருவரின் விழியிலும் உறக்கம் வந்து நிற்க
ஒன்றாக உறங்கி விட்டனர்.
அவளின் தோளில் அவன் சரிந்தான் .
அவள் எழுந்து
அவனை தன் மடியில் கிடத்திக் கொண்டாள்.

தலையை வருடியபடி
மாமா...
நான்
உன்ன இங்க நேசிக்கிறேன்டா
என்று அவள் நெஞ்சில்
உறுதியான காதல் என்பதை போல் வேகமாக அடித்துச் சொன்னாள்.
நீ எப்பயும் சந்தோசமா இருக்கணும்டா...
உன் வலிய நானே அனுபவிக்கணும்டா.

உம்மா....
குட் நைட் மாமா....

இயற்கை எழிலை கண்டு பிரமித்து
கண்கள் விரிய
சிறிது நேரம் உறங்காமல் பாடல் கேட்டுக் கொண்டே
ரசித்துக் கொண்டிருந்தாள்.

குளிருக்கு இதமாக
முந்தானையால் தன் கணவனை போர்த்தினாள்
அவள் சன்னலில் சாய்ந்து படுத்துக் கொண்டாள்.

அந்த அமைதியான
அழகான இரவு
சிலிர்க்கும் காற்று
நிலா வெளிச்சம்
நெஞ்சை நனைக்கும் நீர் வீழ்ச்சி...
மிகவும் ரம்மியமாக இருந்தது.

பூக்களை தொடர்ந்து புகை மூட்டம் வரும் என்று
அவள் கனவிலும் நினைக்கவில்லை.
ஊரை நெருங்கும் வேளை
பனி மூட்டம் போல் சூழ்ந்தது நச்சுகள் நிறைந்த அப்புகை மூட்டம் மலை போல்...

பாலித்தீன் பைகளை
குப்பைகளை மலை மலையாக கொளுத்தி இருக்கிறார்கள்.

ஒரு பெருமூச்சை
கடைசி மூச்சை
மாமா என்றே எடுத்திருக்கிறாள்...

புகையின் தாக்கத்தில் எழுந்தவன்
அதிர்ந்து பிரபா என்றான்...
பிரபா அசையாமல் சன்னலில் சாய்ந்தவாறு மயங்கியிருந்தாள்.
பிறர் பார்த்தால் அது உறக்கம் என்பர் ஆனால் பிரபாவை நன்கு படித்தவன் அவன்.
பிரபாவிற்கு மூச்சுத்திணறல் உள்ளது.
அத்தோடு நெஞ்சு வலியும் உள்ளது... பிரபாவின்
வாயோடு வாய் வைத்து காற்றை பரிமாறினான்.
ஆனால் அது அனைத்தும் வீண் அவள் உடலை பிடித்து உலுக்கும் பொழுது
அவன் மடியில் சரிந்தாள்...
அவள் கைகள் அவன் பாதத்தை அணைத்தது.
அவளின் தாலிக்கொடி
முன்னே வந்து அவன் சட்டையின் கடைசி பட்டனோடு ஊடல் புரிந்தது.
ஹெட் செட் கழன்று
பாடல் ஒலித்தது
உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்

ஒருமுறை இதே போல் தான் மயங்கி சன்னலுக்கு வெளியே அவள் தலையும் கைகளும் தொங்கியது
ஆனால் அவளை சன்னல் ஓரத்தில் அடுத்து அமர விடவில்லை.அவள் கேட்டும் சன்னல் அருகில் அமர விடவே இல்லை.நான் பயந்த பயம் எனக்குத் தான் தெரியும். அப்பொழுது அவளை பார்க்க குழந்தை போல் இருப்பாள்.
அவள் தோழியை சன்னல் அருகில் அமர விட்டு மாறி அமர்ந்தோம்.
பாடல் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
நான் புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தேன்.மூன்று மணி நேரமாக படித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு துளி கண்ணீர் கையினில் தவழ
கண் இமைக்கும் பொழுதில் தோளில் சரிந்தாள் நான் பிடிப்பதற்குள் வண்டியின் போக்கால்
தோளில் இருந்து வழுக்கி மார்பில் இடித்து மடியில் விழுந்தாள்.

திரும்பி அவளை பார்த்தேன் அப்பொழுதும் தூங்காமல் இசையில் மூழ்கி இருந்திருக்கிறாள்
உறங்கினால் தான் அவளுக்கு மயக்கம் வராது.
பாடல் அவள் இதயத்தில் ஒலித்தது

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக் காடே பறவைகள் கூடே

என் முதல் பிள்ளையை தூக்கிக் கொண்டு ஓடினேன்.
அங்கே மருத்துவர்கள்
கரண்ட் ஷாக் வைத்தார்கள்.
செயற்கை சுவாசம் கொடுத்தாங்க.
அவளை அப்படி பாக்க என்னால முடியல...
செத்துட்டன்...
ஒரு வழியா அவளை காப்பாத்திட்டாங்க...
மனம் வலிக்கற விடயத்தை யோசிக்காம இருந்தா போதும்.
அப்படியே மூச்சுத்திணறலுக்கு மாத்திரைலாம் கேட்காது.நாம தான் நல்ல சுத்தமான காத்தை சுவாசிக்கணும்.
இதை கடைபிடிச்சா போதும்...என்றார்...
அதற்கு பின் இன்று இந்த நிலையில் என் மடியில் அவள்

அப்பொழுதும் என் மடியில் மயங்கிக் கிடந்தாள்.. இப்பொழுதும் கிடக்கிறாள்.

என் பாதங்களில்
என்றும் அவள் நெஞ்சத்தை வைத்து படைக்கிறாள்...

பயமா இருக்கு பிரபா
நீ இல்லாத ஒரு வாழ்க்கைய நினைச்சா...
உன் அன்புல கொஞ்சமும் கலப்படம் இல்ல..

நீயும் நானும் என்னைக்கு ஒன்னாவே கைய இறுக்கமாக பிடிச்சிட்டு வாழணும்னு சொல்வல்ல.இங்க பாரு நான் உன் கைய எவ்ளோ இறுக்கமா பிடிச்சிருக்கன்.

நீ தான் சொன்ன வார்த்தைய காப்பாத்த மாட்டேங்குற.....
உனக்கு என் மேல பாசமே இல்ல...
சும்மா நடிக்கற.....
நீ என் மேல வச்ச காதல் பொய்...
என்ன நேசிப்பது பொய்...

பளார்னு ஒரு அடி
என் கன்னம் சிவக்க வச்சா...
யார பாத்துடா நடிச்சனு சொன்ன....

ஏய் நீ கண் முழிச்சிட்டடி...

என் காதல் உனக்கு பொய்யாடா
என்று மீண்டும் அடித்தாள்...

மன்னிச்சிடு பிரபா...
எனக்கு வேற வழி தெரியல...

இதயத்த கத்தியால குத்திட்டு என்னடா மன்னிப்பு...
என்று தலையில் கொட்டினாள்...

ராணி மங்கம்மா
போதும்மா...
வலிக்குது...

நீ பேசன பேச்சுக்கு கொல்லாம இருக்கனேனு சந்தோசப்படு...

நான் உன் மேல வச்ச அன்பு பொய்யா...

நீ என் மேல வச்ச அன்பு களங்கம் இல்லாதது
உனக்கு குழந்தை மனசுடி...
அந்த மனசுக்கு ஏமாத்த தெரியாது...
ஏன்டி அழற...

தெரியல மாமா...
அழுக வருது...
மாமா...

கைய காட்டு
என்ன இது ரத்தம்
தெரியல
என் தலை என்று திட்டி
முந்தியால் அழுத்தி பிடித்தாள்.

எரும
என்ன திட்றீயே
இது என்ன
தெரியல ஹி ஹி

அவள் கையிலும் ரத்தம் வருகிறது.
நல்லா சிரிச்சிக்கோ...

என் கைக்குட்டையால் அவள் கையை அழுத்தி பிடித்துக் கொண்டேன்..

இவ்வளவு நேரம் அழுதேனே
கட்டி பிடித்து ஆறுதல் சொன்னாயா...

நானும் தானே அழுதேன்
நீ என்னை அரவணைத்து ஆறுதல் கூறினாயா...

நாம் இருவருமே சரியான சாம்பார்

அதான் நாம் இருவரும்
சரியான சோடி

ஹா ஹா
ஹா ஹா

இருவரும் ஒரே நேரத்தில்
அணைத்துக்கொண்டார்கள்...

நீ இறந்து விட்டால்
நானும் உன்னோடு இறந்து
என் வாயை மூடி
என்னை என்னிடமே விவரிக்கிறாயா மாமா...

நம் உடல்கள் தான் இரண்டு
உயிர் ஒன்று தான்...மாமா...

உடலை தாண்டி
உள்ளம் காணும்
காதல் இது...
காலத்திற்கும் வாழும் காதல் இது...

உனக்கே உனக்காக
உன் மனைவி
~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (27-Mar-18, 1:33 am)
Tanglish : kaadhal ithu
பார்வை : 676

மேலே