ஒரு பக்க கதைகள்
அழகிய சிலை ஒன்றை சிற்பி செதுக்கினான்.அவன் கையில் உளி
பட்டு காயம் ஏற்பட்டது .இரத்தம் வடித்தது.சிற்பி செதுக்கிய சிற்பம் ஒரு தாய் தன் குழந்தையை மடியில் வைத்து கொண்டிருக்கும் சிற்பம்.சிற்பியின் கை விரல் காயம் அந்த தாய் சிற்பத்தின் கண்கள் செதுக்கும்நிலையில்ஏற்பட்டது.
சிற்பியின் விரல் காயம் இரத்தம் வடிய கண்கள் அமைந்தது.அதாவது
தாயானவள் தன் குழந்தையை ஏந்தி இரத்த கண்ணீர் விடுகிறாள் என்றும்.சிற்பின் நிலை கண்டு கண்களங்கினால் என்றும் அதை
பார்த்த கவிஞர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்.சிற்பின் சிற்பத்தை
கண்டு அனைவரும் பாராட்டினர்.
பாராட்டுக்கள் சிற்பிக்கு மட்டும் அல்ல நீங்கள் யோசிச்சு பாருங்க..
தாய்மை அழகு, தாய் என்பவள் அனைத்தையுமே அவள் குழந்தைகாக என்பாள்.தன் நிலை மறந்து, தன் விழி திறந்து, தன் வலியை பொறுத்து , தன் குழந்தைகளை எந்நிலையிலும் காப்பாள்.
"பெற்றோர்களை மதிக்கவும்."
தன் குடும்பத்திற்காகவும் , தன் தாய்க்காகவும் தன்னை உருக்கி வாழ்பவன்
என்றென்றும் வெற்றியே பெறுவான்.எந்நிலையிலும் வெல்வான்.