இராவணன்
பத்து தலை
~~~~~~~~~~
அவன் ஓர் அவதாரமன்று
ஆனால் சிந்தையில் அவன் தசாவதாரம்.
ஒரு நொடியில்
ஒன்றல்ல பத்து சிந்தனை கொண்டான்.
அவனே என்னை ஆட்கொண்டான்.
சிவன் ரூபம் ஆனான்.
ஜீவன் அவன் பெயரில் கொண்டேன்.
ராமன் எத்தனை ராமனடி
ராவணன் ஒன்றே ஒன்று தானடி.
தமிழன் அவன்
இலங்கையை மட்டுமா ஆண்டான்.
என் உள்ளத்தையும் ஆண்டான்.
உலகை ஆள நாடுகள் வேண்டும்.
உள்ளத்தை ஆள நீ வேண்டும்.
நான் உன்னை நேசிக்கிறேன் இராவணா..
~ பிரபாவதி வீரமுத்து