புதியதோர் உலகம் செய்வோம்

ஓர் முகமாய் ஒளிதந்தே
ஞாலமெலாம் காக்கும் ஞாயிறே!
பண்முக ஒளிவாங்கி ஏற்றுகிறேன்
மண்பயனுறவே ஓர் கவி!

உலகம் உய்ய ஒளிதரும் ஆதவன்
ஒருவர்க்காய் மறையாது!
கார்மேக ஊர்வலம் வரும் மேகம்
ஒருவர்க்கென்று மழை பொழியாது!

அறியா மானிடா! அறிந்திடு நீயும்!
அகந்தை அழித்தால் ஒளிபெறும் நலவாழ்வு!!
நீரின்றி யமையாது உலகு
வான்புகழ் வள்ளுவன் வாக்கு!!

குருதிகள் யாவர்க்கும் சிவப்பே
அறிந்திட்டால் நாடாகும் சிறப்பு!
அன்பு தான் உலகு அதை நம்பு!
வீம்பினால் பின் வெம்பி பயனில்லை தம்பி!!

பிரிவினை வாதத்தை முன்னிருத்தி
மனிதத்தின் வாழ்வை பின்னிருத்தி
சாதித்திடல் கண்டு நகைக்கிறாள் பெண்ணொருத்தி!!

மேட்டிலுள்ள நீர் பள்ளத்தில் விழவேண்டும்!
பள்ளத்தில் உள்ளோர் உள்ளத்தினால் மேலெழ வேண்டும்!
ஏழையின் சிரிப்பில் இறைவனென்பர்
கோழைச்சிரிப்பில் அழிவை தேடாதே!

நாமும் வாழணும் பிறரையும் வாழ்விக்கணும் அது தானே நிறை
நாமே அனுபவித்தால் கிட்டிடும்
வரும் சந்ததி குறை!!

எழுதியவர் : கனகரத்தினம் (4-May-16, 11:37 pm)
பார்வை : 204

மேலே