உழவு

உழவுக்கு உழை வைக்கலாமா!!
************************************
மனிதன் வாழ மண்ணில் பிறக்கிறான் !
பிழைப்புக்காக மண்ணை உழுவுறான்!
உழுதவன் இன்று அழுது புலம்புறான்!
புலம்பல் சத்தம் கேட்டே புலருது பொழுது!

பொழுதுபோக்கும் உலகம் வேறு!
வேறுபிழைப்பறியா உழவன் நிலை பாரு !!
பாரு போற்ற வாழ்ந்த பாட்டன் யாரு?
யாருமில்லா அநாதையா நின்னாரு!!

நின்ன மனிதன் நிலைக்குலைந்து விழுந்தாரு!
விழுந்த விதையா வானம் பார்த்தே கிடந்தாரு!
கிடந்து கிடந்து சுருங்கி நொந்தாரு!
நொந்தவனை திரும்பி பார்க்க நாதியில்லை?!!

நாதியத்த மனிதனையும் தேர்தலப்ப தேடும் உலகமே!
உலகம் உருண்டையுனு ஒத்துக்கிறேன்!
ஒத்துபோக உலகம் கூட திரும்ப வருமே அவ்விடம்...!

அவ்விடத்தில் கம்பு ஊணி காத்திருக்கிறேன் !
காத்துக்காத்து தலைசுத்தி மண்ணில் விழுகிறேன்!
விழுந்த நான் மீண்டும் முளைப்பேன்!
முளைத்து வந்து அன்றுனை கேள்வி கேட்பேன் !
கேட்பேன் கேட்பேன் சோறு தானே திண்ணுகிறாய் இன்றும்...?!!

எழுதியவர் : கனகரத்தினம் (4-May-16, 11:31 pm)
Tanglish : uzhavu
பார்வை : 75

மேலே