உழைப்பாளி

வயிற்றில் வரிக்கோடு!
வாழ்க்கை வறுமையோடு!
வியர்வை உடம்போடு!
கஷ்டத்தில் உழைப்பாளி!!

வறுமை துணியை வாயிலடைத்து
சுயநலமாய் செழிக்கும் முதலாளிகள் !
ஊமையாய் ஓடுதிங்கு வறுமைவாழ்வு!
குருதிச்சிந்தி ஊனமாய் உழைப்பாளர்கள்!!

நீரூற்றாய் உழைப்பாளர் நினைக்க!
கண்ணீர் ஊற்றாகி உதிரத்தை உறிஞ்சி குடிக்க!
வியர்வை வழிய நிலத்தில் சரிந்தால்
பணியிடை நீக்கமாம் பாரீர்!!

புத்தனும் காந்தியும் பிறந்தும்!
அரசிடம் கொள்கையிருந்தும்! கொள்கைகள் பறக்குது காற்றில்!
கரன்சியை முடக்குது முதலாளி நாட்டில்!!

முதலாளி வர்க்கமே
மண்ணோடு மண்ணாக
உழைப்பவர் முளைப்பதெப்போ!


பாடுபடுபவன் பாட்டாளி அதில்
வீடுகட்டிடும் முதலாளி!!
ஓலைகுடிசையும் ஓட்டுதுணியும்
ஒழிவதெப்போ?!!

ஆதியில் உழைத்தவன் உழைத்திட!
பாதியில் வந்தவனின் வயிறு பெருத்திட!
சாதிமதங்களின் சண்டைகள் நடுவே
சமத்துவ உழைப்பாளி தோன்றுவதெப்போ?!!

உள்ளொன்று புறமொன்றாய் பேசிடும் முதலாளிகள்!
கட்டில் மெத்தையில் காற்றோட்டமாய்!
உள்ளமுருகி உழைக்கும் உழைப்பாளர்கள் கட்டிட துணியின்றி
சாலையோரம் நாற்றமாய்!!

கொளுத்தவனுக்கு கொடித்தூக்குவதை விடு!
உழைப்பாளனுடன் கைகோர்த்து
முதலாளித் துவத்திற் கெதிராய் நீயும் போராடு!!

எழுதியவர் : கனகரத்தினம் (4-May-16, 11:29 pm)
பார்வை : 1216

மேலே