ஓட்டு போடு

ஓட்டுப் போட சோம்பல் பட்டு
வீட்டுக் குள்ளே முடங்கி டாமல்
நாட்டுப் பற்று நாளும் கொண்டு
கோட்டைச் செல்லும் வாய்ப்பை நல்கு !

தேடி வந்த இலவ சத்தை
நாடிச் சென்று வாங்கி டாமல்
ஓடிப் போகும் மனத்தை வென்று
ஈடில் லாதப் பண்பைப் பேணு !

காசு பணம் காட்டி விட்டால்
கூசு கின்ற உள்ளத் தோடு
தூசுப் போலத் தட்டி விட்டு
மாசு நீக்கித் தூய்மை யாக்கு !

போடு முன்னே உரக்கச் சிந்தி
கேடு விலகக் கேள்விக் கேளு
பாடு பட்டு உழைக்கும் ஆளைத்
தேடு தேடு ஓட்டுப் போடு ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (4-May-16, 10:59 pm)
பார்வை : 73

மேலே