உன்பெயரை சொல்லவா

விழுந்தும் எழுவேன்
எழுந்து பின் விழுவேன்
என்பெயர் மழை!!

இதயதுடிப்பாய் என்றுமிருப்பேன்
இதயமில்லாது எவரையும் கொல்வேன்
என்பெயர் அலை!!

நீரில்லாது நீந்திடுவேன்
நீரின்றி வாழ்ந்திடுவேன்
என்பெயர் விண்மீன்!!

காலின்றி ஓடிடுவேன்-பிறர்
காலை இடறிடுவேன்
என்பெயர் பணம்!!

நீதிக்கு ஏங்கிடுவேன்
நாதியற்ற சாதிக்குள் தீய்ந்திடுவேன்
என்பெயர் மனம்!!

பாதிக்கு பாதி நானே
பீதியூட்டும் தீதும் நானே!!
சேய்க்கு தாயாகும் என்பெயர் கடல்!!

எழுதியவர் : கனகரத்தினம் (15-Jun-15, 10:49 pm)
பார்வை : 155

மேலே