தமிழா விழித்திடு

விரலிலிட்ட மை காயவில்லை!
விதையிட்ட நெல் விளையவில்லை!
முளையூட்ட பாலும் ஊரவில்லை!
ஊரப்போட்ட மதுவை ஊத்தி கொடுக்குது அரசாங்கம்!!

தலையிட யாருமில்லை!
தத்தளிக்கும் தமிழினந்தான்
தொன்மை தொட்ட மூத்தகுடி!
கேடுகெட்ட அரசாலே ஊத்திகுடி!!

நம்ம சனம் நம்பி! நம்பி !!
நாட்டாற்றில் நிக்கோம் பாரு!!
வந்தவனை அரியணை ஏற்றி
வீடு வாசலின்றி நிற்பது யாரு?!!

உலகத்தில் எங்கேனும் ஓருயிர் போனால்
உள்ளம் குமுறி அழுபவன் தமிழன்!
தமிழினமே அழிந்தும் கூட தமிழனுக்காக
கண்ணீர் வடிக்காத கல்நெஞ்சுகாரன்!!

மற்றவர்க்கு ஊழியம் செய்து! செய்து
ஒட்டுதுணியின்றி ஓட்டாண்டியானது யாரு?
இத்துனைக்கும் காரணமென்ன?
ஒற்றுமையில்லா உணர்வென்றே கூறு!!
வாழ்வித்தது போதும் இனியேனும்
நீ வாழ்ந்திட வழி பாரு!!

எழுதியவர் : கனகரத்தினம் (17-Mar-16, 2:31 am)
பார்வை : 649

மேலே