பசி

வாக்கு உரிமை இல்லாத நாங்கள்
இந்த நாட்டின் குடிகள்-என்று மறக்க-பட்டோம் ;
போராடி பயன் இல்லை காரணம்
இதுவரை நாங்கள் பணத்தை கண்டதில்லை;
எங்களை படைத்தவன் என்று கருதப்படும் இறைவா -
இதோ எங்கள் வேண்டுகோள்;


தன்னிலை மறந்த நிலை
எம் குடிகள் காற்றை மட்டும் சுவாசித்து வாழ்கிறார்கள்;
உடை இன்றி மானத்தை துறந்தோம்-
ஏனோ உணவின்றி உயிரை துறக்க மறந்தோம்;
பிடி மண் உண்டு, ஊற்றெடுக்கும்
சொட்டு பாலில் என் சேய் பசி போக்க நினைத்தேன்
ஆனால் உலகம் அறியா என் பட்சிலமோ -
உயிரை உனக்கும், ஊனை எங்களுக்கும் தந்தது ;
ஒரு வேளை பசியை மறந்தோம்-
இதோ அறிந்திரிபிர் என் முறையீட்டின் சக்தியின் காரணம்;
வரமும், வலமும்
கொடுக்க மறந்தாய் மன்னித்தோம், மரணதையுமா??
ஊன் அழுக, உயிர் ஒழுக
எம் இனம் இன்றோடு அழிந்து போகட்டும்;
உன் பொழுது போக்கிற்கு
எம்மை போன்ற பொம்மை இனி ஒன்று வேண்டாம் மறந்தால்-
உம்மைக் கொன்று எங்கள் பசியைப்போக்க நேரிடும் .
மலம் உண்டு, மதிகெட்டு-
வாழ்ந்த எங்கள் வரலாற்றை நாளை இந்த உலகம் மறக்கட்டும்-
இனி ஒரு வாய்ப்பு தர வேண்டாம் உம்மோடு முறையிட. இறைவா!!

எழுதியவர் : வினோத் கமல் (17-Mar-16, 10:35 am)
Tanglish : pasi
பார்வை : 1531

மேலே