வினோத் கமல் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வினோத் கமல் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 10-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 168 |
புள்ளி | : 3 |
எது தேவையோ அதுவெ தர்மம்~
வாக்கு உரிமை இல்லாத நாங்கள்
இந்த நாட்டின் குடிகள்-என்று மறக்க-பட்டோம் ;
போராடி பயன் இல்லை காரணம்
இதுவரை நாங்கள் பணத்தை கண்டதில்லை;
எங்களை படைத்தவன் என்று கருதப்படும் இறைவா -
இதோ எங்கள் வேண்டுகோள்;
தன்னிலை மறந்த நிலை
எம் குடிகள் காற்றை மட்டும் சுவாசித்து வாழ்கிறார்கள்;
உடை இன்றி மானத்தை துறந்தோம்-
ஏனோ உணவின்றி உயிரை துறக்க மறந்தோம்;
பிடி மண் உண்டு, ஊற்றெடுக்கும்
சொட்டு பாலில் என் சேய் பசி போக்க நினைத்தேன்
ஆனால் உலகம் அறியா என் பட்சிலமோ -
உயிரை உனக்கும், ஊனை எங்களுக்கும் தந்தது
கரு முதல் கல்லறைக் காடு வரை-
திக்குகள் எட்டிலும் நட்ப்போன்று கொண்டு;
கண்டறிய கானகத்தில், உள்ளதும் -நீ,
இல்லாததும் நீ; பொறுமையின்
பெருமையாய் எண்ணற்ற பிறப்பிற்க்கும் எல்லா -
உயிருக்கும் ஈடில்லா இன்பம் எய்தும் அண்ணையாய்;
உம்மை உண்டு உனக்கே உணவாகி-
பாவம் போக்கு வரமும் தந்தாய்
என் ஈனம் கொள்ளும் ஈனமாய் நானே இருக்க -
உன்னை காப்பாற்ற ஏது செய்வேனோ??
மண்ணாய் பிளந்தாலும், நீராய் எழுந்தாலும் -
காலம் கழிய மறதி கொண்டு மண்ணிப்போம்.
உங்களை வெளிச்சத்தில் ஏற்ற இருள் அடைந்தவாரே உருவானவன்
கற்பவரையும் கர்பிப்பவரையும் பல(ர்) கண்டவன்
தோற்றம் போல் சமமாய் பார்க்கும் மனதானது
எழுதுவதும் பின்பு அழிப்பதும் இயல்பானது
கோள் கொண்டு அறிவை போதித்தேன்
ஏனோ புலன் கொண்டு பிறக்க மறந்தேன்
பிறந்திருந்தால், இரு(ற)ந்து இருப்பேன் உங்களுள் ஒருவனாய்
உணர்வும், உணவும் பகிரும் அக்ரினையாய்
வருடம் நான்கும் உருண்டோட, நம்
வரத்தின் சாபமாய், விழும்பில் நாம்
என் வாழ்கைச் சக்கரம் மீண்டும் சுழல
உங்கள் வருகையை எதிர்பார்தவரே சுவற்றில் நான்
என்னை மறுக்காதிர், மறக்காதிர் இதோ
இந்த பெயர் அறியா உறவின் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.