கரும்பலகை

உங்களை வெளிச்சத்தில் ஏற்ற இருள் அடைந்தவாரே உருவானவன்
கற்பவரையும் கர்பிப்பவரையும் பல(ர்) கண்டவன்
தோற்றம் போல் சமமாய் பார்க்கும் மனதானது
எழுதுவதும் பின்பு அழிப்பதும் இயல்பானது
கோள் கொண்டு அறிவை போதித்தேன்
ஏனோ புலன் கொண்டு பிறக்க மறந்தேன்
பிறந்திருந்தால், இரு(ற)ந்து இருப்பேன் உங்களுள் ஒருவனாய்
உணர்வும், உணவும் பகிரும் அக்ரினையாய்
வருடம் நான்கும் உருண்டோட, நம்
வரத்தின் சாபமாய், விழும்பில் நாம்
என் வாழ்கைச் சக்கரம் மீண்டும் சுழல
உங்கள் வருகையை எதிர்பார்தவரே சுவற்றில் நான்
என்னை மறுக்காதிர், மறக்காதிர் இதோ
இந்த பெயர் அறியா உறவின் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.