முத்தழகி என் சொத்தழகி

செவ்வானம் சிவந்திருக்கு
செவ்வழகி சிரிச்சு நிக்கா!
இடையோடு கூடைவைச்சு
இடுப்பழகி நடந்து வரா...

புன்னகை பூ வாய்நிறைய இருக்கையில
கொண்டையில பூவ வைச்சி எம்மனசை இழுக்கிறா!

கண்டாங்கி சேலையில
கருத்தபொண்ணும் சிவக்குறா!
சிவத்தபுள்ள நீயும் சேலை கட்டி
எம்மனச சிதைக்கிற!!

அடி ஓரம் போடி கண்ணே -என்
உழைப்பு நிற்குது உன்முன்னே!
அந்தியுந்தான் சாயுதடி
என் அத்தை மகளே!!

வந்து வந்து பார்க்குதடி முந்திசேலையை தான் கண்ணே!
வருச நாட்டு பெண்ணே! - அதை
வாரி சுருட்டு முன்னே!!

விதைக்கிற காட்டுக்குள்ள
வெள்ளாமை விளையுமடி -நீ
மிதிக்கிற தடமெல்லாம்
பொண்ணாக விளையுமடி!!

ஓரடிய எடுத்து முன்னால வைக்கையில
அதை கண்டு மனம் கல்லாகி நிக்குதடி!
வாழைதண்டு காலுனக்கு வழுக்கிடாம பார்த்துகோடி ! கூடையில என்னருக்கு கொட்டிவிட போகுதடி!!

நீ நின்ன நிலையிலிருக்க
என் கண்ணு மேல நிலைக்க!
குனிஞ்சு மட்டும் தொலைச்சிராதடி
இதயம் நின்னு போகுமடி!!

வெட்டவெளிக்காடு நாம
இரட்டையாக இருப்போம்!
நட்டநடு இரவில் ஒத்தையால புரல்வோம்!

எழுதியவர் : கனகரத்தினம் (2-Apr-16, 4:40 pm)
பார்வை : 219

மேலே