அறிவாயா அன்பே--முஹம்மத் ஸர்பான்

இணையும் நேரம்
இரு உடலுக்கு
ஓருயிர்
உடையாகிறது..,

நீ நிலவின் மகளாக
இருந்தால்
நான் வானின்
எல்லையாய் இருப்பேன்.
நீ மலரின் வாசமாய்
இருந்தால்
நான் வானின்
மழையாய் இருப்பேன்...,
நீ நதியின் மீனாய்
இருந்தால்
நான் வானின்
விண்மீனாய் இருப்பேன்

அடி பெண்ணே!
ஆணின் நெஞ்சிலும்
தாய்மை உண்டு
அறிவாயா அன்பே!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (2-Apr-16, 5:38 pm)
பார்வை : 104

மேலே