காதலில் ஊடல்
பார்க்காம பேசாம
நீ இருக்க
உண்ணாம உறங்காம
நான் இருப்பேன்..!
மேகத்துனூடே மறையுமே
அந்நிலைவைப்போலே
கண்ணாமூச்சி காட்டுகின்ற
காதலியே,
காதலின் தாக்கம்
எனக்கு மட்டுமா?
என் கண் எழுதும்
மாயத்திரையை
மீறி செல்ல
முயன்று பார்,
கடைக்கண்ணிலாவது
உன் காதல் வந்து விழுந்து
என் கையில் சேரும்;
அதை தாங்கி பிடித்தே
உன் திசையில்
ஊன்று கோலாக்கி
காத்திருப்பேன்,
நீ மீண்டும் வரும் வரை
என்னை சோகத்திலிருந்து
மீட்கும் வரை.!!