உன்னை ஓன்று கேட்பேன்
உன்னை ஓன்று கேட்பேன்
என்னை இன்றி
இவ்வுலகி உனக்கு
யாரடி உயிர் என்று.....
இது உன்மேலுள்ள
காதல் திமிர்
தானடி.....உயிர்
உள்ளவரை
உனக்கு நான்
உண்மை தானடி.....
போலியாய் பேசி
பொய்யாய் சிரிச்சு
கேலியும் கிண்டலும்
கடற்கரை சுண்டலும்
என்றும்.....
திரைப்படம் என்று
சொல்லி....திரைஅரங்க
அநாகரிகங்களும்
என்று காலம்
கடத்தவில்லை.....
காதல்
காதல்
என்று சொல்லிச்
சொல்லியே என்
என் காலம் போகுதடி.....
விடலைப் பருவத்தில்
வந்த
உருவ மாற்றக்
காதல் இல்லையடி.....
இது உண்மையில்
உனக்காக
உள்ளம் உருகிவந்த
என் காதலடி.....
காமம் தேடும்
காதல்
காலத்தே அழிந்து
போகும்.....
அழியாதே என்றும்
காதலால்
காதலைத்
தேடும் காதல்.....
காதல் அழியாது
அதை
உள்ளத்தில் சுமந்து
உயிரை
அழிக்கும் ஒவ்வொரு
நபரும்
அடிமட்டக்
கோழையே......
உன்னை இழக்காமல்
உலகில்
வாழ்ந்து பார்
காதல்
இன்னும் ரசிக்கும்படியாய்
இருக்கும்.....