அம்மா அம்மா

எல்லாம் இருந்தும் ஏழையானேன்
இல்லால் இருந்தும் ஏக்கமானேன்
நல்லால் பலர் நட்பாய் இருந்தும்
நடைபிணமானேன் நிம்மதியற்று
நம்பிக்கை தரும் என் தாயில்லாமல்...

உள்ளன்புடன் உடன்பிறந்தோர் இருந்தும்
கள்ளமில்லா பிள்ளைகளிருந்தும்
சுயநலமில்லா தாய்க்கிடாய்
தரணியில் இல்லை கடவுள்கூட...

அன்பொழுகும் அரவணைப்பும்
தற்பெருமை கொள்ளா அவளுழைப்பும்
தன்வயிறை தனலாக்கி உணவளிக்கும்
அவள் குணம் போல் அவனியில் ஏதுமில்லை! எவருமில்லை!

எழுதியவர் : கனகரத்தினம் (27-Mar-16, 12:05 am)
Tanglish : amma amma
பார்வை : 554

மேலே