இரவெல்லாம் புன்னகை

வானின் வசந்தம் அடைமழை!
வாழ்வின் வசந்தம் கொடைமழை!
ஏழைகில்லை இடிமழை!
ஏற்றிட வரும் தேர்(தல்)!!
ஒருநாள் மழைக்கு பூக்கும் காளான்!
ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் பார்க்கும் பூஞ்சை!
புதிதாய் கட்சிகொடி முளைக்கும்
புதுபுது காட்சிகள் நடக்கும்!
புதிதாய் ஆட்சியை அமைக்க
புன்முறுவலுடன் ஏழை கால்பிடிக்கும்!!
காந்தியின் சிரிப்பு கரன்சியில் தெரியும்!
சாந்தியில்லா மனமும் வாந்தியில் மிதக்கும்!!
திருவிழா நாளும் தெருவினில் வர
தெருவெல்லாம் இரவில் புன்னகை பூக்கும்!
விடியலில் விடியாது ஏழைபூ பூக்கும்!!